• Fri. Apr 18th, 2025

பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா கைது…. பாஜக எதிர்ப்புக்கு ஸ்டாலின் அரசு அடிபணிந்ததா?

Byadmin

Jul 24, 2021

சர்ச்சை பேச்சில் சிக்கிய பாதியார் ஜார்ஜ் பொன்னையா கைது செய்யப்பட்டுள்ளார்.
நாகர்கோவில் அருமனையில் பழைய தேவாலயம் ஒன்று புதுப்பிக்கப்பட்டு திறப்புவிழாவிற்கு காத்திருந்தது.

இந்நிலையில் அந்த தேவாலயத்தை திறக்க அனுமதிக்கக்கூடாது என்று பாஜகவினர் போராட்டம் நடத்தினர். இதனால் தேவாலயம் திறக்கப்படவில்லை. இதனைக் கண்டித்து நடைபெற இருந்த ஊர்வலம் தடைசெய்யப்பட்டிருந்த நிலையில் கண்டனக்கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட அருட்தந்தை ஜார்ஜ் பொன்னையா பிரதமர் மோடி அமித்ஷா முதல்வர் ஸ்டாலின் ஆகியோரை சர்ச்சைக்குரிய வகையில் கடுமையாக பேசியதாக கூறப்படுகிறது. இதனை கண்டிக்கும் வகையில் பாஜக உள்ளிட்ட இந்து அமைப்புகள் போராட்டங்கள் நடத்த திட்டமிட்டனர்.

மேலும் மதுரை ஆணையரிடமும்  புகார் தெரிவித்தனர். இது தொடர்பாக மதுரை ஆயர் அந்தோனிபாப்புசாமி வருத்தம் தெரிவித்தார். இந்நிலையில் அருட்தந்தை ஜார்ஜ் பொன்னையா மீது 7 பிரிவுகளில் வழக்கு போடப்பட்டது. ஆனால் பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா தலைமறைவான காரணத்தால் குமரி மாவட்டக் காவல் துறைக் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் உத்தரவின் பேரில் 5 தனிப்படை அமைத்து போலீசார் தேடி வந்த நிலையில் சனிக்கிழமை காலை மதுரையில் அருட்தந்தை ஜார்ஜ் பொன்னையா கைது செய்யப்பட்டுள்ளார்.

அரசின் இந்த நடவடிக்கை பாஜக இந்து மக்கள் கட்சி உள்ளிட்ட இந்து அமைப்புகளின் எதிர்ப்புக்கு ஸ்டாலின் தலைமையிலான அரசு அடிபணிந்துவிட்டாக அரசியல் விமர்சகர்கள் கூறுகிறார்கள். மேலும் பாதிரியார் கைது செய்யப்பட்டிருப்பதன் மூலம் இந்த பிரச்சனைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுவிட்டதாகவும் கூறப்படுகிறது. ஆனால் கிறிஸ்துவ சமுதாய மக்கள் இதனை சாதாரணமாக எடுத்துக்கொள்வார்களா என்பது தான் நமது கேள்வி.