• Fri. Aug 7th, 2026
WhatsAppImage2026-08-06at2018242
previous arrow
next arrow
Read Now

நகராட்சி அலட்சியத்தால் சாலை பழுது அடைவதாக கோட்ட பொறியாளர் சார்பு ஆட்சியரிடம் குற்றச்சாட்டு..,

ByRadhakrishnan Thangaraj

Jul 13, 2026

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் புதிய பேருந்து நிலையம் செல்லும் சாலையில் சங்கரன்கோவில் முக்கு அருகே தொடர்ந்து சாலை பழுதடைந்து பள்ளமேடாக உள்ளதால் வாகன ஓட்டிகள் மிக அவதிப்பட்டு வரும் நிலையில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் அவ்வப்போது சாலையை ஓட்டு போட்டு சரி செய்த நிலையில்,

இன்று விருதுநகர் சார் ஆட்சியர் முகமது இர்பான் நேரில் ஆய்வு மேற்கொண்டார் இந்த ஆய்வின் போது கோட்ட பொறியாளர் லிங்குசாமி உதவி பொறியாளர் உமாதேவி இராஜபாளையம் வட்டாட்சியர் ராஜீவ் காந்தி உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.

அப்பொழுது நெடுஞ்சாலைதுறை கோட்ட பொறியாளர் லிங்குசாமி கூறும் பொழுது இந்த இடத்தில் தண்ணீர் குழாய் செல்வதால் அவ்வப்போது உடைப்பு ஏற்படுகிறது அதை நகராட்சி நிர்வாகம் சரியாக மூடாமல் விட்டுச் செல்வதால் சாலை பழுதடைகிறது நெடுஞ்சாலைத்துறை சார்பில் அவ்வப்போது சாலையை ஒட்டு போட்டு சீர் செய்கின்றோம் இருந்தாலும் தொடர்ந்து நகராட்சி நிர்வாகம் அலட்சியமாக நடந்து கொள்கிறது.

மேலும் சாலை ஒரு மாதத்திற்கு ஒருமுறை பழுதடைகிறது என குற்றச்சாட்டை மாவட்ட சார் ஆட்சியரிடம் முன் வைத்தார். இதை கவனத்தில் கொண்டு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் சாலைகளை நீங்கள் தரமாக போட வேண்டும் என அறிவுரை வழங்கி சார் ஆட்சியர் கூறி ஆய்வு மேற்கொண்டார்.