மதுரையில் பார்வையற்றோர் மாற்றுத் திறனாளிகளுக்கு கடந்த 2020ம் ஆண்டு கொரனா நிவாரண நிதி 30 லட்சத்தில் முறைகேடு செய்த மதுரை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் திருமதி ஜெயசீலியை மதுரை மாவட்டத்திலிருந்து மாற்றவும் விசாரணை நேர்மையாக நடைபெற வேறு துறை அலுவலகத்தில் கொண்டு விசாரணை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் பஸ்பாஸ் புதுப்பித்தல் எங்களுக்கு வழங்கப்பட வேண்டும் முறைகேடு செய்த மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் திருமதி ஜெயசீவியை மதுரை மாவட்டத்திலிருந்து மாற்றம் செய்து விட்டு விசாரணை நடத்தப்பட வேண்டும் ஊழல் அலுவலர்களை தொடர்ந்து காப்பாற்றி வரும் மாற்றுத்திறனாளி நல துறை அதிகாரியை விடுவித்து பிற துறை அதிகாரி கொண்டு நேர்மையான முறையில் விசாரணை நடைபெற ஆணையிட வேண்டும் என்று வலியுறுத்தி பார்வையற்ற மறுவாழ்வு நல சங்கம் சார்பில் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர் இந்த சாலை மறியலில் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் கண்டித்து கோஷங்கள் எழுப்பினர் இந்த சாலை மறியலால் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது