பப்ஜி விளையாட்டை பயன்படுத்தி பண மோசடியில் ஈடுபட்ட புகாரில் கைதான மதன் மீது 1600 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
கொரோனா காலத்தில் உதவி செய்வதாக 2,848 பேரிடம் ரூ.2.89 கோடி பெற்றதாக பப்ஜி மதன் மீது குற்றம்சாட்டப்பட்டது. இந்தநிலையில் ஆபாசமாக பேசி வீடியோ பதிவேற்றம் செய்த வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள மதன் மற்றும் அவரது மனைவி கிருத்திகா மீதான குற்றப் பத்திரிகையை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸ் தாக்கல் செய்தது. 32 சாட்சியங்கள் விசாரிக்கப்பட்டு இந்த வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளதாக தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையில் காவல்துறை தரப்பில் தகவல் அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் 150க்கும் மேற்பட்டோர் புகார் அளித்த நிலையில், 32 பேர் மட்டும் எழுத்துப்பூர்வமாக புகார் அளித்துள்ளதாகவும் குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கொரோனா காலத்தில் உதவி செய்வதாக 2,848 பேரிடம் ரூ.2.89 கோடி பணமோசடி செய்துள்ளதாகவும் காவல்துறை தரப்பில் பப்ஜி மதன் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. மேலும் மதனின் மனைவியை 2வது குற்றவாளியாக சேர்த்துள்ள காவல்துறை, இருவரின் மீதும் மோசடி பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்தக் குற்றப்பத்திரிகையை சுமார் 45 நாட்களில் 30 சாட்சிகளின் வாக்குமூலத்தின் அடிப்படையில் சைபர் கிரைம் போலீசார் தயாரித்துள்ளனர்.