மதுரை அவனியாபுரம் அருகே உள்ள வில்லாபுரம் மாநகராட்சி காலனி பகுதியைச் சேர்ந்தவர் பாலாஜி. மற்றும் ராஜா உசேன் இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சிலருக்கும் இடையே கோவில் திருவிழாவின் போது முன்விரோதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 19ஆம் தேதி பாலாஜி மற்றும் அவரது நண்பரான ராஜா உசேன் ஆகிய இருவரும் மாநகராட்சி காலனி பகுதியில் நின்று கொண்டிருந்தபோது அங்கு வந்த கும்பல் ஒன்று பாலாஜி மற்றும் ராஜா உசேனை அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பி சென்றது.

இதில் பலத்த வெட்டுக்காயமடைந்த பாலாஜி ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது நண்பர் ராஜா உசேன் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை பெற்று வருகிறார்.
சம்பவம் தொடர்பாக அவனியாபுரம் போலீசார் தப்பியோடிய கும்பலை தனிப்படை அமைத்து தேடிய நிலையில் இந்த கொலை வழக்கில் தொடர்புடையதாக
மாதேஷ் (வயது 21) சஞ்சய் ராமசாமி (வயது 17) சிவக்குமார் (வயது 17) சூர்ய பிரகாஷ் (வயது 17) தயாநிதி வயது( 17) ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். போலீசார் கைது செய்யும்போது தப்பி ஓடியதாக சொல்லப்படும் பூவலிங்கத்தையும் பின்னர் கைது செய்தனர். தற்போது இன்று இக்கொலை சம்பவத்தில் முக்கிய குற்றவாளியாக பார்க்கப்படும் மௌன முனிஸ் மற்றும் சண்முகம் ஆகியவர்களையும் இன்று கைது செய்து விட்டோம் என போலீஸ் தரப்பில் சொல்லப்படுகிறது.

இக்கொலையில் முக்கிய குற்றவாளியாக உள்ள மௌனம் முனீஸ் என்பவரை போலீசார் கைது செய்யாமல் காலம் தாழ்த்துவதாக அவனியாபுரம் காவல் நிலைய காவலர்களை கண்டித்து காவல் நிலையத்தை முற்றுகை இடப் போவதாக உறவினர்கள் அறிவித்து இன்று அவனியாபுரம் அம்பேத்கர் சிலை முன்பு ஒன்று கூடிய நிலையில் போலீஸ் தரப்பில் மௌன முனிஷ் என்பவரை கைது செய்துவிட்டோம் போராட்டத்தை கைவிடுங்கள் என்று அறிவுறுத்தியதின் பெயரில் உறவினர்கள் கவன கோஷத்தை எழுப்பி விட்டு சென்றனர்.




