மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் அலுவலகத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் வட்டக்கிளை பேரவை கூட்டம் பட்டர்பிளை தலைவர் விஜயலட்சுமி தலைமையில் நடைபெற்றது.,

இதில் 58 கிராம பாசன திட்டத்திற்கு நிரந்தர அரசாணை வெளியிட வேண்டும், போக்குவரத்து நெரிசலை குறைக்க புறவழிச் சாலை அமைத்துக் கொடுக்க வேண்டும், கண்மாய் கரையை பலப்படுத்தி கண்மாயை சுத்தம் செய்து பூங்க அமைக்க வேண்டும், 58 கிராம பாசன திட்டத்தில் விடுபட்ட பகுதியான ஜோதிநாயக்கனூர், மானூத்து, அல்லிகுண்டம் கண்மாய்களை திட்டத்தில் இணைக்க வேண்டும் உள்ளிட்ட உசிலம்பட்டி உள்ளூர் பிரச்சனை கோரிக்கைகளையும் தமிழக அரசு தேர்தல் வாக்குறுதியான பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் மற்றும் சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளர்கள், ஊர்புற நூலகர்கள், எம்ஆர்பி செவிலியர்கள் உள்ளிட்டோர்களுக்கு காலமுறை ஊதியம் சட்டபூர்வ ஓய்வூதியம் பெற்று தந்திட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.,
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் நீதிராஜன்.,
தமிழக அரசு பதவி ஏற்ற பின்பு குற்றச் செயல்களில் ஈடுபடக்கூடிய இளைஞர்களுக்கு முறையான வேலை வாய்ப்பு வழங்கினால் குற்றங்களை குறைப்பதற்கு ஏற்பாடாக இருக்கும் எனவும்.,

தமிழக அரசு பதவி ஏற்று ஆளுநர் உரையில் முதல்வரின் பதில் உரை எங்களுக்கு பலத்தை ஏமாற்றத்தை அளித்திருக்கிறது., அந்த பதில் உரையில் காலி பணியிடங்களை நிரப்புவார்கள் பழைய ஓய்வூதிய திட்டத்தை அறிவிப்பார்கள் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய அரசாணை 111 ல் டேப்ஸ் என்ற திட்டத்திற்கு இடைக்கால நிவாரணம் அறிவித்திருக்கிறார்கள் அதை நாங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை முழுமையான பழைய ஓய்வூதிய திட்டத்தை முழுமையாக உடனடியாக அமல்படுத்த வேண்டும் அதில் திருப்தி இல்லை.,
தமிழக முதல்வர் எங்களுடைய கோரிக்கைகளான பழைய ஓய்வூதிய திட்டம், சத்துணவு அங்கன்வாடி வருவாய் கிராம ஊழியர்கள் எம்ஆர்பி தொகுப்பு ஊதியத்தில் பணிபுரியகின்ற அனைத்து ஊழியர்களையும் கால முறை ஊதியத்தில் கொண்டு வர வேண்டும், சாலை பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை நீதிமன்ற தீர்ப்பு வந்தும் கடந்த ஆட்சி கிடப்பில் போட்டது இந்த ஆட்சி வந்ததும் அதற்கான தீர்வு எட்டப்படும் என எதிர்பார்க்கிறோம்., காலி பணியிடங்களை தமிழ்நாட்டில் 5 லட்சத்திற்கும் மேலாக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க கூடிய காலி பணியிடங்களை அரசுத்துறை மற்றும் பொதுத்துறைகளில் இருக்கக்கூடிய காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்.,

புதிதாக திட்டங்களுக்கு ஏற்றாற் போல் புதிய பணியிடங்களை நிரப்ப வேண்டும் தீர்மானங்களை நிறைவேற்றி இருக்கிறோம் அரசு விரைந்து கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் எனவும்.,
மாவட்ட பேரவை செப்டம்பர் 26 ல் மாநில பேரவை திண்டுக்கல்லில் நடைபெற உள்ளது., இந்த அரசு இந்த கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை என்றால் இந்த அரசுக்கான சரியான எந்த வழிகளில் பயணிக்க வேண்டும் என இந்த அரசுதான் தீர்மானிக்க வேண்டும் என கூட்டத்தின் வாயிலாக கேட்டுக்கொள்கிறோம் என பேட்டியளித்தார்.,




