
நீட் தேர்வு ரத்து, 7 பேர் விடுதலை, தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என திமுக அரசு மீது குற்றம் சாட்டி அதிமுக சார்பாக தமிழகம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அந்த ஆர்ப்பாட்டத்தின் ஒரு பகுதியாக திருச்சியில் முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தலைமையில் 200க்கும் மேற்பட்ட அதிமுக நிர்வாகிகள் தொண்டர்கள் திருச்சி தென்னூர், அண்ணாநகரில் மாநகர் மாவட்ட அலுவலகம் முன்பாக கருப்பு சட்டை, கருப்பு பட்டை அணிந்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் தேர்தல் நேரத்தில் திமுக அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசை கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டது.
