தூத்துக்குடி மாவட்டத்தில் வெவ்வேறு பகுதிகளில் 2 இளம்பெண்கள் காணாமல் போனது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி அருகேயுள்ள புதியம்புத்தூர் நயினார்புரம் கிழக்குத் தெருவைச் சேர்ந்தவர் மூக்காண்டி மகள் நாகலட்சுமி (23), இவரை கடந்த 6ம் தேதி முதல் காணவில்லை. இதுகுறித்து புதியம்புத்தூர் காவல் நிலையத்தில் மூக்காண்டி புகார் செ்யதார். புகாரின் பேரில், இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) வேல்முருகன் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.
மற்றொரு சம்பவம்
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகேயுள்ள வில்வமரத்துப்பட்டி கிராமம், கிழக்குத் தெருவைச் சேர்ந்தவர் பொம்முதுரை. இவரது மகள் சர்மிளா (19), கடந்த 6ம் தேதி முதல் இவரை காணவில்லை. இதுகுறித்து விளாத்திகுளம் காவல் நிலையத்தில் பொம்முதுரை புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் கலா வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.