இந்தியாவில் முதன்முறையாக செவிலியர்களுக்கான சர்வதேச ‘டெய்சி’ விருது பெற்று கோவை ராயல் கேர் மருத்துவமனை வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது

செவிலியர்களின் அர்ப்பணிப்பு மிக்க சேவையை சர்வதேச அளவில் கௌரவிக்கும் உலகப் புகழ்பெற்ற டெய்சி விருதுகள்’ (DAISY Awards for Nursing Excellence) திட்டத்தை அறிமுகப்படுத்திய இந்தியாவின் முதல் மருத்துவமனை என்ற பெருமையை, கோவை நீலாம்பூரில் அமைந்துள்ள Royal Care Super Speciality Hospital பெற்றுள்ளது.
ராயல் கேர் மருத்துவமனை, DAISY Foundation உடன் இணைந்து இந்த விருது திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த முயற்சி, இந்தியாவில் செவிலியர் சேவைகளை அங்கீகரிக்கும் புதிய தேசிய தரத்தைக் குறிக்கிறது. சர்வதேச விருது ‘டெய்சி விருது’ என்பது நோயாளிகளுக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் அன்புடனும் அர்ப்பணிப்புடனும் சேவை செய்யும் செவிலியர்களை கௌரவிக்கும் சர்வதேச அங்கீகாரமாகும்.

ராயல் கேர் மருத்துவமனையின் தலைவர் டாக்டர் மாதேஸ்வரன் கூறியதாவது எங்கள் செவிலியர் அணியை வலுப்படுத்துவதிலும், அவர்களுக்கு தொடர்ச்சியான ஆதரவை வழங்குவதிலும் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். நோயாளிகளை முழுமையாக குணப்படுத்த வேண்டுமெனில், முதலில் செவிலியர்களை அன்போடு கவனித்துக் கொள்ள வேண்டும்.செவிலியர்களே நமது எதிர்காலம் என்றார்.




