• Sun. May 17th, 2026
WhatsAppImage2026-05-15at0006252
previous arrow
next arrow
Read Now

காரைக்காலில் பறவைகள் மற்றும் விலங்குகள் குறைந்து வருவதாக கவலை..,

ByM.I.MOHAMMED FAROOK

May 17, 2026

காரைக்கால் மாவட்டத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளாக ஸ்ட்ரீட் லைட் பவுண்டேஷன் என்ற அமைப்பு மூலம் பறவைகள் மற்றும் விலங்குகளுக்கு உணவளிப்பதுடன் பல்வேறு சமூக நல பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் கொரோனா பெருந்தொற்றின் போது விலங்குகள் மற்றும் பறவைகளுக்கு போதுமான உணவு கிடைக்காத நிலையில் இந்த அமைப்பு சார்பில் பறவைகள் மற்றும் விலங்குகளுக்கு உணவளிக்கப்பட்டு வந்தது இதுமாவட்ட மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பையும் பாராட்டையும் பெற்றது. அப்போது இருந்து இதுவரைபறவைகள் மற்றும் விலங்குகளுக்கு இவர்கள் உணவளிப்பதை நிறுத்தாமல் செய்து வருகின்றனர். வழக்கம்போல இன்று காலை காரைக்கால் கடற்கரை அருகில் பறவைகள் மற்றும் விலங்குகளுக்கு ஸ்ட்ரீட் லைட் பவுண்டேஷன் அமைப்பு சார்பில் தீபன், விக்னேஷ், முருகதாஸ் ஆகியோர் உணவளித்தனர்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய விக்னேஷ் “காரைக்கால் மாவட்டத்தில் பறவைகள் மற்றும் விலங்குகள் எண்ணிக்கை குறைந்து வருவது கவலை அளிப்பதாக உள்ளதாகவும், வெயில் காலங்களில் பறவைகளுக்கு தங்களது வீடுகளில்தண்ணீர் வைக்க பொதுமக்கள் முன்வர வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார். அரசு தரப்பில்வீடு கட்ட அனுமதி பெறும் போது வீட்டுக்கு ஒரு மரம் மற்றும் மழைநீர் சேமிப்பு அமைத்தால் தான் அனுமதி வழங்கப்படும் என அறிவிக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

காரைக்கால் மாவட்டம் கிராமங்களை சார்ந்து உள்ளதால் மாவட்டத்தில் உள்ள கால்நடை மருத்துவமனைகளைமேம்படுத்த வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.