
திமுக இளைஞர் அணி அமைப்பாளரும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உத்தரவின்படி திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக இளைஞர் அணி நிர்வாகிகள் புதிதாக அறிவிக்கப்பட்டனர்.

அதுசமயம், திண்டுக்கல் மாநகர திமுக இளைஞர் அணி பகுதி அமைப்பாளர்கள் கார்த்திக், பாலாஜி, டேனி, சோலை பாலா ஆகியோர் மாவட்ட கழக செயலாளரும், பழநி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி.செந்தில்குமார் அவர்களை சந்தித்து ஆசி பெற்றனர்.உடன் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் கணேசன், மாவட்ட துணை செயலாளர் பிலால்உசேன், மாநகர பொருளாளர் மீடியா சரவணன், மாநகர இளைஞர் அணி அமைப்பாளர் ரகுமான் உள்ளிட்ட பலர் உள்ளனர்.
