கொடைக்கானல் சுற்றுலா பயணிகளை தாக்கும் உள்ளுர் வியாபாரி மற்றும் பொதுமக்கள் காவல் துறை கடும் எச்சரிக்கை.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வெளி மாநிலங்களில் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம்.
இந்நிலையில் கொடைக்கானல் வரும் சுற்றுலாப் பயணிகளை சில உள்ளூர் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் அடிக்கடி தாக்குவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் கொடைக்கானல் வரும் சுற்றுலா பயணிகளை பாதுகாக்கும் நலன் கருதி கொடைக்கானல் மாவட்ட துணை கண்காணிப்பாளர் மதுமதி கூறுகையில் கொடைக்கானல் வரும் சுற்றுலா பயணிகளை மிகவும் அன்போடு பழக வேண்டும் என்றும் சுற்றுலா பயணிகள் உள்ளூர் மக்களிடம் தகராறில் ஈடுபட்டால் உடனடியாக காவல்துறையினருக்கு துறையில் தகவல் தெரிவித்தால் சுற்றுலா பயணிகளின் அல்லது உள்ளூர் வியாபாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும் சுற்றுலாப் பயணிகளை தாக்கும் உள்ளூர் வியாபாரிகள் மற்றும் பொதுமக்களுக்கு காவல்துறையினருக்கு தெரிவிக்கும் விதமாக கொடைக்கானல் நகரின் பல்வேறு பகுதிகளில் கியூ .ஆர். ஸ்கேனர் விளம்பர பதாகைகள் மூலம் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
மேலும் கியூ.ஆர் ஸ்கேனர் மூலம் தகவல் தெரிவித்தவுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து குற்ற செயலில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கொடைக்கானல் காவல்துறையினர் சார்பாக தெரிவித்துள்ளார்.