• Wed. Mar 19th, 2025

தாலிபான்களை எதிர்க்க வேண்டிய அவசியம் அமெரிக்காவுக்கு இல்லை – ஜோ பைடன்!..

By

Aug 17, 2021

ஆப்கானிஸ்தான் தற்போது தாலிபான்களின் வசமாகியுள்ளது. 20 ஆண்டுகளுக்குப் பிறகு நாட்டைக் கைப்பற்றியதோடு அதன் பெயரையும் இஸ்லாமிக் எமிரேட் ஆப் ஆப்கானிஸ்தான் என மாற்றிவிட்டனர். தலிபான் அமைப்பின் அரசியல் தலைவரான முல்லா அப்துல் கனி பரதர் ஆப்கானிஸ்தான் ஜனாதிபதியாக பொறுப்பேற்றுள்ளார். பெண்கள் யாரும் வேலைக்குச் செல்லக்கூடாது, ஆண்கள் கட்டாயம் தாடி வளர்க்க வேண்டும் என சகட்டுமேனிக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. எங்களை காப்பாற்ற யாருமே இல்லையா? என ஆப்கானிஸ்தான் மக்கள் கதறிக்கொண்டிருக்கும் நேரத்தில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வெளியிட்டுள்ள அறிவிப்பு மக்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது.

ஆப்கான் விவகாரம் குறித்து பைடன் வெள்ளை மாளிகையில் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பின் போது ஜோ பைடன் கூறியதாவது:

அதிகாரிகளுடன் இணைந்து தீவிரமாக கண்காணித்து வருகிறோம், ஆப்கானில் நாட்டை கட்டமைக்கும் பணிக்காக அமெரிக்க படைகள் அங்கு செல்லவில்லை, அது எங்கள் வேலையும் இல்லை.

அல்கொய்தாவை முறியடிக்கவும், ஒசாமாவை பிடிக்கவும் இந்த போர் தொடுப்பு நடத்தப்பட்டதாகவும்,எப்போது படைகளை வாபஸ் வாங்கினாலும் இதுதான் நடந்திருக்கும் எனவும் பைடன் கூறியுள்ளார்.

ஆப்கான் அரசும், படையும் தாலிபானை எதிர்க்காத பட்சத்தில் நாம் ஏன் அவர்களை எதிர்க்க வேண்டும்? ஆப்கான் படைகளே தங்கள் நாட்டை காக்காத போது, அப்படி ஒரு போரை நடத்த வேண்டிய அவசியம் அமெரிக்க படைகளுக்கு கிடையாது, போரில் அமெரிக்கர்கள் தங்கள் உயிரை பறி கொடுக்க வேண்டிய அவசியமும் இல்லை என அதிபர் ஜோ பைடன் தெரிவித்தார்.