• Wed. Mar 22nd, 2023

தனியார் தொலைக்காட்சி மீது தாக்குதல்… குமரி பத்திரிகையாளர்கள் போராட்டம்!…

By

Aug 18, 2021

சென்னையில் உள்ள தனியார் தொலைக்காட்சி அலுவலகம் தாக்கப்பட்டத்தை கண்டித்து கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் பத்திரிகையாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

சென்னையில் உள்ள தனியார் தொலைக்காட்சியின் தலைமை அலுவலகத்தை கடந்த வாரம் ராஜேஷ்குமார் என்கிற நபர் கையில் ஆயுதங்களுடன் நுழைந்து சேதப்படுத்தினர். இதுமட்டுமல்லாமல் அலுவலகத்தில் பணியில் இருந்த ஊழியர்களுக்கும் கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

தமிழகத்தையே கொந்தளிக்க வைத்த இச்சம்பவத்தைக் கண்டித்து, கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பத்திரிகையாளர்கள் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த போராட்டத்தின் போது, தனியார் டிவி அலுவலகத்தை தாக்கிய ராஜேஷ் குமாரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்.

மேலும் அத்துமீறி தொலைக்காட்சி அலுவலகத்தில் நுழைந்து பொருட்களை அடித்து உடைத்தது மட்டுமில்லாமல் அங்கு இருந்த பணியாளர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்திருப்பது கருத்து சுதந்திரத்திற்கு விடப்பட்ட சவாலாக கருதப்படுவதால், உடனடியாக அவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் எனவும் பத்திரிகையாளர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *