டெல்லி பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்தில் இருந்த தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகள் நீக்கம் செய்யப்பட்டுள்ளன. ஆங்கில துறையின் பாடப்பிரிவில் இருந்த தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகள் நீக்கப்பட்டதால் பலரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். எழுத்தாளர்கள் பாமா, சுகிர்தராணியின் படைப்புகள் பல்கலைக்கழக தேர்வுக் குழுவின் ஆலோசனைக்குப் பின்னர் நீக்கப்பட்டுள்ளது. ஆங்கிலத் துறையில் பாடப் பிரிவில் இருந்து தமிழ் எழுத்தாளர்கள் படைப்பு நீக்கப்பட்டது அதிர்ச்சி அளிக்கிறது.
ஆங்கிலத்துறையைச் சேர்ந்த பேராசிரியர்களுக்கு தெரியாமலேயே இரவோடு இரவாக படைப்புகள் நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. நீக்கப்பட்ட படைப்புகளுக்கு பதில் சுல்தானாவின் கனவுகள் மற்றும் ராமாபாயின் படைப்புகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன. டெல்லி பல்கலை பாடத்திட்டத்தில் இதுவரை இடம்பெற்ற தமிழ்ப் பாடங்கள் திடீரென நீக்கப்பட்டது குறித்து தமிழ் ஆர்வலர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து தமிழறிஞர்களும், தமிழ் ஆர்வலர்களும் கண்டனங்களைத் தெரிவித்து வரும் நிலையில், மீண்டும் டெல்லி பல்கலைக்கழகப் பாடத்திட்டத்தில் தமிழ் சேர்க்கப்பட வேண்டும் என தமிழர்கள் சார்பில் கோரிக்கை விடப்பட்டு வருகின்றன. இக்கோரிக்கையை டெல்லி பல்கலைக்கழகம் ஏற்றுக் கொள்ளுமா? என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.