• Wed. Jan 22nd, 2025

சூறைகாற்றால் முறிந்து விழுந்த ஆலமரம்.

Byadmin

Jul 14, 2021

குமரி மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக மழையுடன் காற்றும் கலந்து வீசிய சூழல் நிகழ்துக்கொண்டே இருக்கிறது.

ஆடி பட்டம் தேடி விதை என்ற பழமொழிக்கு இணையாக நம் முன்னோர்கள் சொல்லியுள்ள எதிர் பதம். ஆடிக்காற்றில் அம்மியும் நகரும் என்பது ஒரு புதுமை.

நாகர்கோவில் அருகே தம்பத்துகோணம் பகுதியில் வீசிய சூறைக் காற்றால்.அப்பகுதியில் 100ஆண்டுகளை கடந்த ஆலமரம் ஒன்று வேரோடு சாய்ந்தது.

குமரியில் கடந்த இரண்டு நாட்களாக மழை, காற்று,இடி ஓசை இவற்றுடன் தொடரும் மழையும் என்ற நிலையில் காற்றின் வேகத்தில் பழைய நூறு ஆண்டுகள் பழமையான ஆலமரம் சரிந்ததில் அருகில் இருந்த இரண்டு கடைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

நாகர்கோவில் மா நகராட்சி,தீ அணைப்பு துறை மற்றும் காவல்துறையினர் இணைந்து தரையில் சாய்ந்த ஆலமரத்தின் பாகங்களை நவீன இயந்திரத்தை பயன் படுத்தி வேக, வேகமாக மரத்தின் பாகங்களை துண்டு,துண்டாக வெட்டி அகற்றி போக்குவரத்து தடையை சீர் செய்தனர். அதிகாலையில் ஆலமரம் வேரோடு சாய்ந்ததால் அந்த பகுதியில் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.