• Sun. Oct 13th, 2024

சமையல் எரிவாயு சிலிண்டருக்கு இறுதி ஊர்வலம் நடத்திய ம நீ மையம் கட்சியினர் ஆர்ப்பாட்டம்.

Byadmin

Jul 10, 2021

சமையல் எரிவாயு சிலிண்டருக்கு இறுதி ஊர்வலம் நடத்திய மக்கள் நீதி மைய கட்சியினர் – சிலிண்டர் மற்றும் விறகு அடுப்புகளை பறிமுதல் செய்து ஆர்ப்பாட்டத்தை களைத்த போலீசார்

பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து மக்கள் நீதி மைய கட்சியினர் மதுரை ஆரப்பாளையம் கிராஸ் ரோடு பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது நாளுக்கு நாள் விலை உயர்வை சந்தித்து வரும் பெட்ரோல், டீசல் விலையை கண்டித்து இருசக்கர வாகனத்தை ட்ரைசைக்கிலில் ஏற்றியும் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வினை கண்டித்து சமையல் எரிவாயு சிலிண்டரைய பாடையில் ஏற்றி இறுதி ஊர்வலமாக வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து பெண்கள் மற்றும் அக்கட்சியின் நிர்வாகிகள் ஒப்பாரி வைத்தும் தங்களது கண்டனத்தை வெளிப்படுத்தினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டதை அடுத்து போலீசார் சிலிண்டர்கள், இரு சக்கர வாகனத்தையும் மற்றும் விறகு கட்டைகள், விறகடுப்பு உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்து போராட்டத்தை கலைத்தனர்.

மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 300க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *