கோவை மாநகராட்சியில் கடந்த ஆண்டு தூய்மை பணியாளர்களாக 325 பணியாளர்களை நியமித்தனர் அனைத்து சாதியினருக்கும் பொதுவாக தூய்மை பணியினை வழங்கவேண்டும் என்று அரசு ஆணையின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட பணியாளர்கள் பெரும்பாலும் அதிமுக அரசியல்வாதிகளின் பலத்தாலும், சாதியின் பலத்தாலும், பண பலத்தாலும் ,உயர் படிப்பு படித்தவர்கள் என்று அதிகப்படியான தகுதியை மேற்கொண்டு தூய்மைபணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர். பின்னர் அவர்கள் இது நாள் வரை தூய்மைப் பணி செய்ய மறுக்கிறார்கள். அரசு பணி விதிகளின்படி தேர்ந்தெடுக்கப்பட்ட பணியாளர் தனக்கு உரிய பணியினை செய்ய தவறினால் அவரை பணியை விட்டு நீக்குவதற்கு அரசு விதிகள் உள்ளது. ஆயினும் இதுவரை எந்த ஒரு அதிகாரியும் இவர்கள் மேல் நடவடிக்கை எடுக்காமல் மேலும், அவர்களை அலுவலகத்திற்குள் பணி செய்ய ஊக்குவிக்கிறார்கள். அதேவேளையில் கருணை அடிப்படையிலும் ,வேலைவாய்ப்பு அடிப்படையிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட தூய்மைப் பணியாளர்கள் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்தவர்கள் என்றால் கட்டாயப்படுத்தி வார்டுகளில் தூய்மைப் பணி செய்யப்படுவது வாடிக்கையாக உள்ளது. அரசு விதிகள் அனைவருக்கும் பொதுவானவை என்ற போதிலும் இன்றளவும் சாதியின் வெறியால் ஒருசிலருக்கு பாகுபாடு பார்த்து தூய்மைப் பணியை செய்ய கட்டாயப்படுத்துவது தொடர்கிறது. தூய்மை பணி செய்வது கேவலமாக நினைத்து இன்றுவரை பணி செய்ய மறுப்பது சாதி வேறுபாடு ஊக்குவிப்பதற்கு சரிநிகர் ஆகும். இதுகுறித்து சமூக நீதிக் கட்சி தொழிற்சங்கமும் ,டாக்டர் அம்பேத்கர் மாநில மாநகராட்சி தூய்மை பணியாளர் சங்கமும் பல்வேறு காலங்களில் உயர் அதிகாரிகளுக்கு கடிதம் வாயிலாகவும், நேரிலும் எடுத்துக்கூறியும், புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படாமல் இருக்கிறது. எனவே, தொடர்ந்து தூய்மைப் பணி செய்ய மறுக்கின்ற யாராக இருந்தாலும் கட்டாயமாக தூய்மைப் பணி செய்ய வார்டு பணிக்கு அழைக்கின்ற நடவடிக்கையில் சமூக நீதிக்கட்சி முன்னெடுத்துள்ளது. இதனால் அவர்களுக்கு வெற்றிலை பாக்கு தாம்பூல தட்டுடன் அழைப்புக் கொடுத்து அழைக்கும் நிகழ்வு அறிவிக்கிறது. எனவே ,நாளை காலை 11 மணியளவில் 20.7.2021 சமூக நீதிக் கட்சி தலைவர் பன்னீர்செல்வம் அவர்கள் தலைமையில் கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் அலுவலகத்தில் உதவி ஆணையாளரை நேரில் சந்தித்து வெத்தலை பாக்கு தாம்பூல தட்டுடன் அழைப்பு கொடுக்கும் நிகழ்வு நடைபெறுகிறது.