கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா மூன்றாவது அலை வந்தால் அதனை சமாளிக்க அனைத்து நடவடிக்கைகளும் நாகர்கோவில் அரசு மருத்துவக் கல்லூரியில் செய்யப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் அரவிந்த் இன்று செய்தியாளர்களிடம் கூறினார்.
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர்.அரவிந்த இன்று நாகர்கோவிலில் செய்தியாளர்களுக்கு கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில் ” கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா இரண்டாம் அலையின்போது நாள் ஒன்றுக்கு 1400 பேருக்கு தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.போலீஸ் மற்றும் பொதுமக்களின் ஒத்துழைப்பு காரணமாக இரண்டாம் அலை முழுவதுமாக சமாளிக்கப்பட்டது. தற்போது 3வது அலை வர வாய்ப்புள்ளதாக கூறப்படுவதால் பொதுமக்கள் முகக் கவசங்கள் அணிந்தும் சமூக இடைவெளியை கடைபிடிக்கவும் வேண்டும். இந்த அலை குழந்தைகளை தாக்கும் என்பதால் கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனைத்து நடவடிக்கைகளும் தயார் நிலையில் உள்ளது. மத்திய அரசின் நாகாய் திட்டத்தின் கீழ் ஒரு நிமிடத்திற்கு 100 லிட்டர் ஆக்சிஜன் தயார் செய்யக் கூடிய அளவிற்கான யூனிட் இன்னும் இரு தினங்களில் செயல்பட உள்ளது இதேபோன்று குழந்தைகளுக்கான சிறப்பு சிகிச்சை மையம் கட்டி முடிக்கப்படும் தருவாயில் உள்ளதால் இன்னும் 20 இடங்களில் அதுவும் பயன்பாட்டுக்கு வரும் என்று தெரிவித்தார்.