• Wed. Apr 24th, 2024

குழந்தை திருமணம் கலெக்டர் நடவடிக்கை!…

By

Aug 13, 2021

தேனி மாவட்டத்தில் குழந்தை திருமணம் முற்றிலும் தடுத்தல் தொடர்பாக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை , காவல் துறை , கல்வித்துறை , சமூக பாதுகாப்புத்துறை ஆகிய துறைகள் ரீதியாக துரிதமாக நடவடிக்கைகள் மேற்கொண்டு ,அதற்கான விழிப்புணர்வு நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது .மேலும் குழந்தை திருமணங்கள் நடைபெறுவதால் , இளம் வயதிலேயே கருத்தரித்தல் , கருச்சிதைவு , தாய் சேய் மரணம் , ரத்தச்சோகை போன்ற பிரச்சனைகளும் , குழந்தைகள் எடை குறைவாகவும் , உடல் மன குறைபாடு உள்ள குழந்தையாகவும் பிறக்கும் அபாயம் உள்ளது . படிக்கும் காலத்தில் குழந்தைகளுக்கு திருமணம் செய்வதால் கல்வி தடைப்படுவதுடன் பெண் குழந்தைகளுக்கு தன்னம்பிக்கை குறைந்து எதிர்காலத்தை இழக்க நேரிடும் .

தேனி மாவட்டத்தில் நடப்பாண்டில் 145 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது . குழந்தை திருமணம் செய்து வைக்கும் பெற்றோர்கள் மீதும் , குழந்தை திருமணம் நடத்த தூண்டியவர்கள் மீதும், குழந்தை திருமண தடை சட்டத்தின்படி 2 ஆண்டு கடுங்காவல் தண்டனை அல்லது ரூ .1 லட்சம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனை விதிக்கப்படும்.

தேனி மாவட்டத்தில் குழந்தை திருமணம் நடைபெறுவதாக அறிந்தால் , சைல்டு லைன் இலவச தொலைபேசி எண் 1098 , மாவட்ட சமூக நல அலுவலக எண் : 04546 – 254368 , மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு எண் : 89031 84098 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் . எனவே . தேனி மாவட்டத்தை குழந்தை திருமணம் இல்லாத மாவட்டமாக உருவாக்கிட பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு நல்கிடுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் க.வீ.முரளிதரன் , அவர்கள் தெரிவித்துள்ளார் .

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *