

கோவை மாவட்டம் வால்பாறை தாலுகா பகுதியில் இன்று காலை வாலிபர் ஒருவரை கரடி கடித்து குதறியது அவர் பரிதாபமாக உயிரிழந்தார். கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள வில்லோனி எஸ்டேட்டில் தொழிலாளியாக வேலை செய்து வருபவர் மோகன் ராஜ் இவர் நேற்று மாலை தனது மனைவியுடன் வேலை முடிந்து வீட்டிற்கு வந்து கொண்டிருந்த போது புதர் செடிகளுக்குள் மறைந்திருந்த கரடி ஒன்று திடீரென பாய்ந்து தாக்கி மோகன் ராஜை புதருக்குள் இழுத்துச்சென்றுள்ளது இதை சற்றும் எதிர்பாராத மோகன் ராஜ் வேதனையில் அலறியுள்ளார்.
அப்போது அலறல் சத்தம் கேட்டு அருகிலிருந்த பொதுமக்கள் ஓடிவந்து சத்தம் போட்டு கரடியை விரட்டியுள்ளனர் பின்பு படுகாயமடைந்த அவரை அங்கிருந்து மீட்டு உருளிக்கல் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு மருத்துவ பரிசோதனையில் அவர் ஏற்கனவே இறந்திருப்பது தெரியவந்ததையடுத்து தகவலறிந்து அப்பகுதிக்கு விரைந்து சென்ற வால்பாறை வனச்சரக அலுவலர் ஜெயச்சந்திரன் தலைமையிலான வனத்துறையினருடன் மோகன்ராஜின் உடலை வால்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

இச்சம்பவத்தையடுத்து சம்பவப்பகுதிக்கு சென்ற வனத்துறையினர் மோகன் ராஜை தாக்கிய கரடியை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டுவருகின்றனர் தாக்கிய கரடியை பிடிப்பதற்காக வனத் துறையினர் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் மக்களுக்கு பல்வேறு விதமான விழிப்புணர்வு அறிவுரைகளை வழங்கியுள்ளனர்.

