கரூரில் முன்னாள் அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர் வீடு மற்றும் அலுவலகங்களில் இன்று காலை முதல் வருமான வரித் துறையால் சோதனை நடந்து கொண்டு வருகிறது. இதற்கு பதிலளித்த அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம்,”ரெய்டு மூலம் பயமுறுத்தினால் அதை சமாளிக்க அ.தி.மு.க எப்போதும் தயாராகவே இருக்கிறது. இது போன்ற ஜனநாயக விரோத போக்கை தி.மு.க கைவிட வேண்டும். இந்த மாதிரியான வருமான வரித்துறை சோதனைகளை சட்டரீதியாக சந்திக்க தயாராகவே இருக்கிறோம். புதிதாக பதவியேற்கும் ஒரு அரசு இப்படி வருமான வரித் துறையை ஏவி விடுவது அபாயகரமான சூழலை உருவாக்கும்” என கண்டித்தார் ஓ.பி.எஸ்