• Tue. Apr 23rd, 2024

ஜெயலலிதா பல்கலைக்கழக விவகாரம் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியை கண்டித்த எடப்பாடி பழனிச்சாமி…

Byadmin

Jul 22, 2021

ஜெயலலிதா பெயரில் பல்கலைக் கழகம் அமைக்கப்பட்டதால் அதை அண்ணாமலை பல்கலைக் கழகத்தின் கீழ் இணைக்கின்றனர். இது கண்டனத்திற்குரியது என தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

ஜெயலிதா பல்கலைக்கழகம் பற்றி உயர் நீதிமன்றத்தில் முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் ஒரு மனுவை தாக்கல் செய்தார். அதில் வேலூரில் உள்ள திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரித்து விழுப்புரத்தை தலையிடமாகக் கொண்டு கடந்த அதிமுக ஆட்சியில் டாக்டர் ஜெ.ஜெயலலிதா பல்கலைக்கழகம் கடந்த 2020 செப்.16 அன்று புதிதாக சட்டம் இயற்றப்பட்டு உருவாக்கப்பட்டது. கடந்த ஆட்சியில் துணைவேந்தர் நியமிக்கப்பட்டு, விழுப்புரம் மாவட்டம் செம்மேடு கிராமத்தில் சுமார் 70 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது.

ஆனால், இன்னும் கட்டுமானப் பணிகள் தொடங்காததால் பல்கலைக்கழகம் இன்னும் பழைய தாலுகா அலுவலகத்திலேயே ஊழியர்கள் இன்றி செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில், திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அதன் முதுகலை மையத்தில், முதுகலை படிப்பில் சேர விண்ணப்பங்களை வரவேற்று அறிவிப்புவெளியிட்டது சட்டவிரோதம்.

விழுப்புரத்தில் ஜெயலலிதா பல்கலைக்கழகம் இயங்கும்போது திருவள்ளுவர் பல்கலைக்கழகம் முன்புபோல விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்களில் மாணவர் சேர்க்கை நடத்த முடியாது. எனவே, டாக்டர் ஜெ. ஜெயலலிதா பல்கலைக்கழகம் சுமுகமான முறையில் இயங்க தேவையான நிதியை ஒதுக்கீடு செய்யஉயர்கல்வித் துறை செயலாளருக்கு உத்தரவிட வேண்டும். பல்கலைக்கழகத்துக்கு உடனடியாக பதிவாளரை நியமிக்க உத்தரவிட வேண்டும் எனவும் கூறியிருந்தார்.

அதற்கு பதிலளித்த தற்போதைய உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி ஜெயலலிதா பல்கலைக்கழகம் ஆரம்பிக்கவும் இல்லை அதற்கான நிதியும் கொடுக்கவும் இல்லை.அதேபோல, அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் நிர்வாக அதிகாரி பல்கலையைத் தன்னாட்சி அங்கீகாரத்தில் இருந்து இணைப்புஅங்கீகாரமாகப் பெறும் பல்கலைக்கழகமாக மாற்றவேண்டும் என்றுஅரசுக்குப் பரிந்துரை செய்துள்ளார். தற்போது அண்ணாமலை பல்கலைக்கழகமும் கடுமையான நிதி சுமையில் உள்ளது. எனவே, அதை இணைப்பு அங்கீகாரம் பெற்று பல்கலைக்கழகமாக மாற்றஅரசு முடிவு செய்துள்ளது. அதன்கீழ் விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை மாவட்டத்தில் இயங்கும் கல்லூரிகளை இணைக்க உள்ளோம்.

மேலும் ஜெயலலிதா பல்கலைக்கழகத்துக்கு ஒரு சிறிய பணியைக்கூட கடந்த அரசு செய்யவில்லை. இதுதொடர்பான வழக்கில் தமிழக அரசு இந்த விளக்கத்தைத்தான் தெரிவிக்கும் என தெரிவித்தார். அதற்கு இன்று பதில் அளித்த தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, ஜெயலலிதா பல்கலை இயங்கக் கூடாது என்பதற்காகவே அண்ணாமலை பல்கலையுடன் இணைக்க முயற்சிக்கின்றனர். இதை வன்மையாக கண்டிக்கிறோம். புதிதாக மதுரையில் ஆரம்பிக்கும் நூலகத்தை நாங்கள் எதிர்க்கவில்லை. ஆனால், ஏற்கனவே துவங்கப்பட்ட பல்கலைகழகத்தை நிதி இல்லை என வேறு பல்கலைகழகத்துடன் இணைப்பது சரியா? நூலகம் அமைக்க மட்டும் எங்கிருந்து நிதி வந்தது என எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *