

அரியலூர் மாவட்டம், அண்ணலெட்சுமி ராஜபாண்டியன் திருமண மண்டபத்தில் உங்கள் தொகுதியில் முதல்வர்
திட்டத்தின்கீழ் வருவாய்த்துறையின் சார்பில் இலவச வீட்டுமனைப்பட்டா, ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணைகளையும், புதிய
குடும்ப அட்டை, ஊரக வளர்ச்சித்துறை, சமூக நலத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர்
நலத்துறை உள்ளிட்ட துறைகளின் சார்பில் 1,296 பயனாளிகளுக்கு ரூ.10.27 கோடி மதிப்பிலான அரசின் நலத்திட்ட
உதவிகளை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் ஜூலை 20 ஆம் தேதியான இன்று வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித்தலைவர் ரமண சரஸ்வதி, அரியலூர்
சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பா, ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர்
க.சொ.க.கண்ணன், மாவட்ட ஊராட்சிக்குழுத்தலைவர் சந்திரசேகர், திட்ட இயக்குநர் (ஊரக வளர்ச்சி முகமை)
சுந்தர்ராஜன், கோட்டாட்சியர் ஏழுமலை மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
