• Thu. Mar 28th, 2024

ஜிம்பாப்வே உலகின் பரிதாபமான நாடுகளின் பட்டியலில் முதலிடம்

ByA.Tamilselvan

May 25, 2023

உலகின் பரிதாபமான நாடுகளின் பட்டியலில் தென் ஆப்ரிக்க நாடுகளின் ஒன்றான ஜிம்பாப்வே முதலிடத்தில் உள்ளது.
மகிழ்ச்சியில்லாத அல்லது பரிதாபமான நாடுகளின் பட்டியலை சர்வதேச பொருளாதார நிபுணர் நிறுவனம் வெளியிட்டுள்ளது. மொத்தம் 157 நாடுகள் 9இந்த பட்டியலில் இடம்பிடித்துள்ளன. வருமானம், சமூக ஆதரவு, ஆரோக்கியம், சுதந்திரம், தாராள மனப்பான்மை மற்றும் ஊழல் இல்லாமை ஆகியவை மகிழ்ச்சியை அளவிடும் காரணிகளாக கருதப்பட்டன.
அதன்படி 244% பண வீக்கம் மற்றும் வேலை வாய்ப்பின்மையால் பொருளாதாரத்தில் தத்தளித்து வரும் ஜிம்பாப்வே முதலிடத்தில் உள்ளது. போரால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளான பாகிஸ்தான், ரஷ்யா, உக்ரைன், சிரியா, சூடான் நாடுகளை விட ஜிம்பாப்வே நாட்டில் பணவீக்கம் விகிதம் அதிகமாகும். இதற்கு காரணம் ஆளுங்கட்சியான ஜிம்பாப்வே ஆப்ரிக்க தேசிய கூட்டமைப்பின் தவறான பொருளாதார கொள்கைகளே என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது. நீண்ட நாட்கள் அங்கு அதிபராக இருந்தவரும் 2019ம் ஆண்டு இறந்தவருமான ராபர்ட் முகாபே இதற்கு காரணம் என்பது குற்றச்சாட்டாகும். துக்கமான நாடுகளின் பட்டியலில் 10 இடஙக்ளில் வெனிசுலா, சிரியா, லெபனான், சூடான், அர்ஜென்டினா, ஏமன், உக்ரைன், கியூபா, துருக்கி, இலங்கை, ஹைதி ஆகிய நாடுகள் உள்ளன.
இந்த பட்டியலில் 103வது இடத்தில் இந்தியா உள்ளது. துக்கமான நாடுகளின் பட்டியலில் கடைசி இடத்தை சுவிட்சர்லாந்து பிடித்துள்ளது. அமெரிக்காவுக்கு 134ம் இடம் கிடைத்துள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *