கந்துவட்டியை தடைசெய்ய பல முறை முறையிட்டும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை எனவே தன்னை 03:06:23 தேதி தூக்கிலிட கோரி கடம்பூரை சேர்ந்த அய்யலுசாமி என்ற வழக்கறிஞரும் முன்னாள் மாவட்ட காங்கிரஸ் துணைத்தலைவர் ,கோவில்பட்டி கோட்டாட்சிரிடம் மனு அளித்துள்ளார்
தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் கந்து வட்டி, மீட்டர் வட்டி, வாரவட்டி ஆகிய முறைகளில் கந்து வட்டி தமிழகத்தில் சட்ட விரோத தொழிலாக நடைபெற்று வருகிறது. இதனால் விவசாயிகள், தொழிலாளர்கள, தினசரி சந்தை வியாபாரிகள், கைவினைஞர்கள், முடிதிருத்தும் தொழிலாளர்கள், துப்புரவு தொழிலாளர்கள் மற்றும் ஏனைய கூலித்தொமிலாளரகள் அதிக அளவில் பாதிக்கப்பட்டு வருகிறார்கள் .
ஆகவே,கந்து வட்டி சட்டம் தமிழ் நாட்டில் தற்போது அமலில் இருந்தாலும் அதனை அமல்படுத்துவதில் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் உள்ளது . ஆகவே கந்துவட்டி தொடர்பாக பல மாற்றங்களை மேற்படி சட்டத்தில் செய்ய வேண்டுகிறேன். கந்து வட்டி தொழில் செய்யும் நபர்கள் வன்முறை, கட்டபஞ்சாயத்து , ரவுடியிசம், தாதாயிசம், என குற்ற பின்னணி கொண்டவர்கள்தான் இந்த கந்துவட்டி தொழிலில் கொடி கட்டி பறக்கிறார்கள். (ஒரு லட்சம் ரூபாய்க்கு வார வட்டி பத்து ஆயிரம் என மாதம் நாற்பது ஆயிரம், வரை வட்டி வசூல் நடைபெற்று வருகிறது )
அத்துடன் கந்து வட்டி கொடுமையால் பாதிக்கப்பட்டவர்கள் காவல் நிலையத்திற்கு செல்லவே பயப்படுகிறார்கள். அதனையும் மீறி காவல் நிலையத்திற்கு செல்லும் போது மேற்படி கந்துவட்டி ரவுடிகளுக்கு ஆதரவாக மேற்படி காவல் நிலையங்களில் உள்ள போலீஸார் செயல்படுகிறார்கள். மேற்படி, காவல்நிலையங்களில் நடவடிக்கை எடுக்காத நிலையில் பாதிக்கப்பட்ட நபர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகங்களை நாட வேண்டிய நிலை உள்ளது. மேற்படி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின் பேரில் தான் கந்து வட்டி புகார்களில் FIR பதிவு செய்யப்படுகிறது. நேரடியாக வரும் புகார்களை தட்டி கழித்து, பாதிக்கப்பட்ட நபர்களுக்கு எதிராக காவல்துறை நடந்தது கொள்ளக்கூடிய எதார்த்த நிலையே தற்போதுவரை தொடர்கிறது.
ஆகவே, தமிழகம் முழுவதும் கந்து வட்டி தொடர்புடைய புகார் மனுக்களை முழுமையாக விசாரணை செய்ய வேண்டும். அத்துடன் அதற்கென தனிப்பிரிவு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மேற்பார்வையில், ADSP அவர்களை கொண்டு விசாரணை அதிகாரியாக இருந்து செயல்பட தகுந்த நடவடிக்கையும், மேற்படி கந்து வட்டி சட்ட பிரிவுகளில் மாற்றம் கொண்டு வரப்பட வேண்டும் .
கத்து வட்டி தொடர்புடைய குற்றவாளிகள், தொழில் ஈடுபடும் நபர்கள். பாதிக்கப்பட்ட நபர்களிடம் இருந்து கையெழுத்து மட்டுமே பெறப்பட்ட வெற்று காசோலைகள், புரோநோட்டுகள் பயன்பாட்டில் உள்ளன.
இதனால் பணத்தையும் இழந்து விட்டு ,பாதிக்கப்பட்ட நபர்கள் மீது பல்வேறு நீதிமன்றங்களில் வெற்று காசோலைகள்,புரோநோட்டுகளை வைத்து வழக்கு தொடர்நது கந்து வட்டியால் பாதிக்கப்பட்டு,வாழ்வாதாரத்தை இழந்த நபர்களை மேலும் மேலும் அழைக்கழிப்படும் நிலையும் உள்ளது. ஆகவே,கந்துவட்டி தொடர்புடைய வெற்று காசோலைகள், புரோநோட்டுகள் ஆகிய அனைத்தையும் காவல்துறை விசாரணையின் போது பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்க மேற்படி சட்டத்தில் சட்டதிருத்தம் கொண்டு வரப்பட வேண்டும். கந்து வட்டி கொடுமையால் பாதிக்கப்பட்ட நபர்களின் சொத்துககளான வீடு, நிலம், காலிமனை, மற்றும் வீட்டு உபயோகபொருள்களை பலவந்தமாக பிடுங்கி கொள்ளக்கூடிய அனைத்து நடவடிக்கைகளையும் கந்து வட்டி தொழில் செய்யும் நபர்கள் சட்ட விரோதமாக செய்து வருகிறார்கள். இதனை தடுக்க மேற்படி குற்றவாளிகள் செய்த பதிவு ஆவணங்கள் அனைத்தையும் ரத்து செய்ய சட்ட திருத்தம் செய்ய வேண்டும்.
கத்து வட்டி தொழில் செய்யும் நபர்கள் பாதிக்கப்பட்ட நபர்களின் குடும்ப உறுப்பினர்களை மிரட்டுதல், கடத்துதல், கடத்தி வைத்து துன்புறுத்தல், கொலை செய்தல், பாலியல் துன்புறுத்தல் போன்ற செயலை செய்யும் நிகழ்வுகளும் நடந்தேறி வருகிற அவலம் இருப்பதால் மேற்படி பாதிக்கப்பட்ட நபர்களுக்கு பாதுகாப்பும் அத்துடன் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு வாதிடும் சட்ட தொழில் செய்யும் வழக்கறிஞர்களுக்கு பாதுகாப்பு வழங்கிடவும் சட்ட திருத்தம் கொண்டு வரபட வேண்டும்.
பாதிக்கப்பட்ட நபர்கள் கொலை செய்யப்பட்டால் அவர்களின் குடும்ப உறுப்பினர்களை கந்து வட்டி கொடுமையால் கொலை செய்யப்பட்டால் அல்லது கந்து வட்டி கொடுமையால் தற்கொலை செய்து கொண்டாலும் உடனடியாக அரசு இறந்தவர்கள் குடும்பத்தினர் வாரிசுகள் ஒருவருக்கு அரசு வேலையும் அவர் வாழ்ந்த காலத்தில் ஈட்டும் ஊதியத்தை நஷ்ட ஈடாக தரவும், மேற்படி நஷ்ட ஈட்டை கொலை செய்யும் கந்து வட்டி கொலைகாரர்களிடமிருந்து வசூல் செய்யும் வகையில் சட்டத்திருத்தம் செய்ய வேண்டும். கந்து வட்டி தொழில் செய்தாலே அந்த நபர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய நடவடிக்கை தொடர சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட வேண்டும். அத்துடன் கந்து வட்டி தொழில் செய்யும் நபர்களுக்கு ஏஜெண்டுகள் உள்ளார்கள். அவர்கள் மீதும் வழக்கு தொடரப்பட வேண்டும்.
கந்து வட்டி வழக்குகள் காலதாமதம் ஆகாமல் சிறப்பு நீதிமன்றங்கள் அமைத்து மூன்று மாதம் முதல் ஒரு ஆண்டிற்குள் தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
கோரிக்கைகள்
- கந்துவட்டி தொழில் செய்யும் நபர்கள், மிகப் பெரிய குற்றபின்னனி கொண்ட நபர்கள் ஆகவே கந்துவட்டி புகார் வந்தவுடன் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும்.
2 கந்துவட்டி கொடுமையால் பாதிக்கப்பட்ட நபர்களின் காசோலை புரோநோட்டுகள் மற்றும் கந்துவட்டி தொழில் செய்யும் மாபியாக்கள் சட்டவிரோதமாக மிரட்டி, கைப்பற்றி வைத்து உள்ள வீடுகள், காலிமனைகள், மற்றும் வீட்டு உபயோகபொருள்கள் , பத்திரங்கள் மற்றும் ஏனைய ஆவணங்கள் (இதில் அதிகம் கையெழுத்து மட்டுமே பெறப்பட்ட வெற்று காசோலைகள் மற்றும் புரோநோட்டுகள் மிக மிக அதிகம் ) மற்றும் கைப்பற்ற மாவட்ட அளவில் சிறப்பு படைகள் அமைத்து கைப்பற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
3 கந்து வட்டி வழக்குகளுக்கு சிறப்பு நீதிமன்றங்கள் அமைத்து விரைவான நீதிகிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
4 கந்து வட்டி கொடுமையால் பாதிக்கப்பட்ட குடுபத்திற்கு பாதுகாப்பு மற்றும் கந்துவட்டி தொழிலுக்கு எதிராக போராடும் வழக்கறிஞர்களுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும்.
5.கந்துவட்டி கொடுமையால் பாதிக்கப்பட்ட நபர்கள் தற்கொலை செய்து கொண்டால் தமிழக அரசு ஒரு கோடி ரூபாய் நஷ்டஈடு மற்றும் அரசு வேலை வழங்க வேண்டும் .
6 கந்து வட்டி தொழிலுக்கு எதிராக புகார் அளிக்க டோல்ப்ரி நம்பரை தமிழகம் முழுவதும் காவல்துறை ஏற்படுத்த வேண்டும்
7,கந்துவட்டி தொழில் செய்யும் நபர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்க சட்டதிருத்தம் செய்ய வேண்டும். கந்து வட்டி கொடுமையால் தற்கொலை செய்து கொண்டால் அதற்கு காரணமாக நபர்கள் தூக்கு தண்டனை விதிக்கப்பட வேண்டும்.
8, தமிழகத்தில் கடந்த இருபது ஆண்டுகளில் பதியப்பட்டுள்ள கந்துவட்டி வழக்கு விபரம் அதில் தண்டனை பெற்று தந்த விபரம் வெள்ளை அறிக்கையை தமிழக அரசு வெளியிட வேண்டும்
9 , தமிழகம் முழுவதும் கந்துவட்டி புகார்களை விசாரணை செய்ய மாவட்டம் தோறும் மாவட்ட காவல் கண்ணானிப்பாளர் அவர்கள் மேற்பார்வையில் கொண்டு ADSP விசாரணை அதிகாரியாக இருந்து மாவட்ட காவல் கண்ணானிப்பாளர் அலுவலகத்தில் வைத்து,கந்துவட்டி புகார்களை விசாரணை செய்து கால தாமதம் செய்யாமல் உடனே கந்துவட்டி மாபியாக்களை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
10.கந்துவட்டி மாபியாக்கள் தமிழகம் முழுவதும் மண்டல வாரியாக நெட்வொர்க் அமைத்து செயல்படுகிறார்கள்.
அவர்களை காவல்துறை உளவு பிரிவு மூலம் தகவல்களை சேகரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்
11.கந்துவட்டி மாபியாக்கள் மிகப்பெரிய குற்ற பிண்ணனி கொண்ட நபர்கள் ஆகவும், கந்துவட்டி மாபியாக்களுக்கு கொலை கொள்ளை ஆட்கடத்தல் போன்ற குற்றபிண்ணனி கொண்ட நபர்கள் தான் இந்த தொழில் செய்கிறார்கள், ஆகவே தமிழக அரசு கந்துவட்டி தொழிலை ஒழிக்க போர்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். - கந்துவட்டி குற்றவாளிகளின் சொத்துக்களை பறிமுதல் செய்து அரசு கஜானாவில் சேர்க்கவேண்டும்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக பலமுறை மனு அளித்தும் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை, ஆகவே தமிழக அரசு முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்கள் பெயரில் ஆட்சி நடத்துகிறார் ஆகவே அவரது நூற்றாண்டு விழா கொண்டாடப்படவுள்ள இந்த 03:06:23 அன்று என்னை கயத்தாறு வீரபாண்டிய கட்டபொம்மன் தூக்கிலிடபட்ட அதே இடத்தில் என்னையும் தமிழக முதல்வர் சகோதரி கனிமொழி கருணாநிதி திருகரங்கரங்களால் நீதிக்காக போராடும் என்னை பொதுமக்கள் முன்னிலையில் தூக்கிலிடவேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் . எனது மரணத்தால் இனி யாரும் பொது மக்கள் நலனுக்காக மனு அளிக்ககூடாது என்று தமிழக அரசு பறைசாற்றும் வகையில் இந்த தூக்கு அமைய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் .இவ்வாறு அய்யலுசாமி மனுவில் குறிப்பிட்டுள்ளார்.