சமீபத்தில், பிரதமர் மோடியை அம்பேத்கருடன் ஒப்பிட்டு இளையராஜா பேசி இருந்தார். அவரது கருத்துகள் கடந்த 2 நாட்களாக சர்ச்சையையும், விவாதத்தையும் தூண்டியிருக்கிறது. மேலும் இளையராஜா மீதான விமர்சனத்துக்கு எதிராகவும் பதிவுகள் பகிரப்பட்டு வருகின்றனர்.
அம்பேத்கருடன் பிரதமர் மோடியை ஒப்பிட்டு, தான் பேசிய கருத்துக்கு மன்னிப்பு கேட்க முடியாது என்று இசையமைப்பாளர் இளையராஜா தெரிவித்ததாக, அவரது சகோதரரும், இசையமைப்பாளருமான கங்கை அமரன் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் பரபரப்பாக பேசப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில், இளையராஜாவின் மகன் யுவன் சங்கர் ராஜா, இன்ஸ்டாகிராமில் கருப்பு ஆடைகளை அணிந்து, நான் கருப்பு திராவிடன், தமிழன் என்பதில் பெருமை கொள்பவன் என்று கூறி பதிவிட்டுள்ளார். இந்த பதிவுக்கு அதிக அளவில் ஆதரவு குவிந்து வருகிறது.