• Tue. Aug 11th, 2026
WhatsAppImage2026-08-06at2018242
previous arrow
next arrow
Read Now

அடுக்குமாடி குடியிருப்புயில் இருந்து குதித்து வாலிபர் தற்கொலை!..

Byகுமார்

Oct 4, 2021

மதுரை ஆண்டாள்புரம் பகுதியில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் கிருஷ்ணமூர்த்தி என்ற வாலிபர் மாடியின் மேலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதுகுறித்து சுப்பிரமணியபுரம் காவல் துறையினர் கிருஷ்ணமூர்த்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில் கிருஷ்ணமூர்த்தி எம்இ பட்டதாரியான இவர் உரிய வேலை வாய்ப்பு கிடைக்காததால் மன உளைச்சலுக்கு உள்ளாகி தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்று கூறப்படுகிறது.