திருமணம் செய்வதாக ஏமாற்றி கர்ப்பமாக்கிய குமரி வாலிபர் தலைமறைவான நிலையில், அவருடன் சேர்த்து வைக்க கேட்டு கோவை இளம்பெண் நாகர்கோவிலில்
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு.
கோவை மாவட்டம் பல்லடம் ராயபாளையம் அபிராமி நகரை சேர்ந்தவர் வெங்கடேஸ்வரி(26). இவரை கன்னியாகுமரி மாவட்டம் வைரக்குடியிருப்பு பகுதியை சேர்ந்த இளைஞர் அபிராம் என்ற இளைஞர் கோவையில் புணிபுரிந்து கொண்டிருந்தபோது காதலிப்பதாக கூறி கர்ப்பமாக்கி கட்டாய கருக்கலைப்பு செய்த பின் திருமணம் செய்யாமல் ஏமாற்றியதாக கூறப்படுகிறது.

இந்திலையில், இளைஞருடன் சேர்ந்து வாழ்வதற்காக குமரிக்கு வந்த அந்த இளம்பெண், கடந்த 5 நாட்களாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம், அனைத்து மகளிர் காவல் நிலையம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் என நீதி தேடி அலைந்து கொண்டிருக்கிறார்.
எனினும் யாரும் தனது பிரச்சனைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்காத நிலையில், இன்று வெங்கடேஸ்வரி திடீரென நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பரப்பரப்பானதை தொடர்ந்து விரைந்து வந்த காவல்துறையினர் பெண்ணை வாகனத்தில் ஏற்றி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
அவர் அதிகாரிகளுக்கு அளித்த மனுவில்,
கோவை மாவட்டம் பல்லடம் ராயபாளையம் அபிராமி நகரை சேர்ந்தவர் வெங்கடேஸ்வரி(26)
கோவை மாவட்டம் பல்லடத்தில் வேலை பார்த்தபோது நாகர்கோவில் எறும்புகாடு,வைராகுடியிருப்பு மணி மகன் அபிராம்(28) என்பவருடன் நட்பாக பழகினேன் பின்னர் அவர் காதலிப்பதாக என்னிடம் கூறி அடிக்கடி போனில் பேசி வந்தார்.
இந்நிலையில் என்னை மதுரைக்கு மற்றும் கோயம்புத்தூருக்கு அழைத்து வைத்து என்னைத் திருமணம் செய்வதாகக் கூறி ஓட்டலில் வைத்து என்னுடன் உல்லாசம் அனுபவித்தார். இதன் மூலம் நான் கர்ப்பம் ஆனேன்.
ஆனால் என்னை கட்டாயப்படுத்தி கருவை கலைக்கவைத்தார். பின்னர் கன்னியாகுமரிக்கு என்னை அழைத்து வந்து ஓட்டலில் தங்கவைத்துவிட்டு பின்னர் அவரது வீட்டிற்கு அழைத்து சென்றபோது அவருடைய அப்பா அம்மா அக்கா ஆகியோர் என்னை மிரட்டினார்கள். மேலும் நான் படிக்கவில்லை, அழகாக இல்லை என்று கூறி ஏமாற்றி விட்டாய் என்று என்னை மிரட்டினார்கள்.
எனவே என்னை அபிராமுடன் என்னை சேர்த்து வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.