• Tue. Sep 16th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

இஸ்ரோ இளம்விஞ்ஞானிகள் திட்டத்திற்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

Byவிஷா

Feb 20, 2024

பள்ளி மாணவர்களின் ஆர்வத்தை ஊக்குவிக்கும் வகையில், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் இஸ்ரோ, 9ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்காக, இளம் விஞ்ஞானிகள் திட்டம் என்ற சிறப்பு திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்தத் திட்டத்தில் பங்கு பெற விரும்பும் மாணவர்கள் இன்று முதல் மார்ச் 20ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவித்துள்ளது.
விண்வெளி தொழில்நுட்பம் மற்றும் விண்வெளி பயன்பாடுகள் பற்றிய அடிப்படை அறிவை மாணவர்களுக்கு வழங்குவதற்கான இளம் விஞ்ஞானிகள் திட்டத்திற்கு விண்ணப்பிக்க இஸ்ரோ அழைப்பு விடுத்துள்ளது. அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் வளர்ந்து வரும் போக்குகள் குறித்து பள்ளி செல்லும் மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, இளம் உள்ளங்களின் ஆர்வத்தை ஊக்குவிக்க, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) 9-ம் வகுப்பு படிக்கும் பள்ளிக் குழந்தைகளுக்காக “இளம் விஞ்ஞானிகள் திட்டம்” (யுவ விஞ்ஞானி கார்யக்ரம்) என்ற சிறப்பு திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
இந்த திட்டம் கடந்த 3 ஆண்டுகளில் இந்தியாவின் ஒவ்வொரு மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் முறையே 111, 153 மற்றும் 337 மாணவர்களின் பங்கேற்புடன் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. மாணவர்களின் இருப்பிடங்களின் அடிப்படையில் 5 குழுக்களாகப் பிரிக்கப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்டது.
நடப்பாண்டு, இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் சேர நாளை (பிப்ரவரி 20) முதல் வருகிற மார்ச் 20 ஆம் தேதி வரை https://jigyasa.iirs.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம்.
இந்த திட்டத்தில் கடந்த 2023-ம் ஆண்டு நாடு முழுவதும் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலிருந்து 1.25 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பதிவு செய்தனர். இதனால் இஸ்ரோவுக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. விண்வெளி அறிவியல், விண்வெளி தொழில்நுட்பம் மற்றும் விண்வெளி பயன்பாடுகள் குறித்த அடிப்படை அறிவை விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் வளர்ந்து வரும் போக்குகளுக்கு ஏற்ப இளம் மாணவர்களுக்கு வழங்குவதே இந்த முயற்சியின் முக்கிய நோக்கமாகும்.

குறிப்பாக, நாட்டின் கிராமப்புறங்களுக்கு முன்னுரிமை அளித்து இளம் மாணவர்களுக்கு விண்வெளி அறிவியல், விண்வெளி தொழில்நுட்பம் மற்றும் விண்வெளி பயன்பாடுகள் பற்றிய அடிப்படை அறிவை வழங்குவதற்காக இளம் விஞ்ஞானிகள் திட்டம் உருவாக்கப்பட்டது.
2 வார கால வகுப்பறை பயிற்சி, பரிசோதனை செயல்முறை விளக்கம், போட்டிகள், ரோபோடிக் கிட், இஸ்ரோ விஞ்ஞானிகளுடன் மாதிரி ராக்கெட் கலந்துரையாடல் மற்றும் கள ஆய்வு ஆகியவை இத்திட்டத்தில் அடங்கும். வகுப்பறை விரிவுரைகள், ரோபாட்டிக்ஸ் சவால், ராக்கெட், செயற்கைகோள்களின் வடிவமைப்பு, தொழில்நுட்ப வசதி வருகைகள் மற்றும் விண்வெளி விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடல் ஆகியவை இந்தப் பாடத்திட்டத்தில் அடங்கும் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினர். விண்வெளி அறிவியல் மற்றும் வானியல் பற்றி தெரிந்துகொள்ளவும்  ஆர்வமாக இருக்கும். பள்ளி மாணவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள இஸ்ரோ சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.