தமிழகத்தில் ‘இன்னுயிர் காப்போம் நம்மைக் காக்கும் 48 திட்டத்தின் கீழ், இலவச சிகிச்சைக்கு வழங்கப்படும் உச்சவரம்பு தொகை ரூபாய் 1 லட்சத்தில் இருந்து 2 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2022 ஆம் ஆண்டு ”இன்னுயிர் காப்போம் நம்மை காக்கும் 48 என்ற திட்டத்தை தொடங்கி வைத்திருந்தார் முதல்வர் ஸ்டாலின். அதன்படி விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் இலவச சிகிச்சை அளிக்கப்படும். மேலும் விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முதல் 48 மணி நேரத்திற்கு இத்திட்டத்தின் மூலம் இலவச சிகிச்சை அளிக்கப்படும்.
இவ்வாறு விபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் உயிரை உரிய நேரத்தில் காப்பாற்றுவதற்காக முதல்வர் அறிவித்த திட்டம் கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைமுறையில் இருந்து வருகிறது.
இந்நிலையில் இது குறித்து பட்ஜெட் கூட்டத்தொடரில் அமைச்சர் தங்கம் தென்னரசு ஒரு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது இன்னுயிர் காப்போம் நம்மை காக்கும் 48 என்ற திட்டத்தின் கீழ் விபத்து நடந்த முதல் 48 மணி நேரத்தில் வழங்கப்படும் இலவச சிகிச்சைக்கான உச்ச வரம்பு தொகை ஒரு லட்சத்திலிருந்து 2 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.