• Sun. Feb 9th, 2025

இலங்கையில் ராஜபக்சே மகன் சொத்துக்குவிப்பு வழக்கில் கைது!

ByIyamadurai

Jan 25, 2025

சொத்து குவிப்பு வழக்கில் இலங்கை முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்சேவின் இளைய மகன் யோஷிதா ராஜபக்சேவை போலீசார் கைது செய்தனர்.

இலங்கை முன்னாள் அதிபர் மஹிந்தா ராஜபக்சே, பிரதமராகவும் பதவி வகித்தவர். எல்டிடிஈயினருக்கு எதிரான உள்நாட்டு போர் நடந்த காலத்தில் இவர் தான் அதிபராக இருந்தார். இலங்கை அரசியலில் இவரது குடும்பம் அசைக்க முடியாத செல்வாக்குடன் இருந்தது. இவர் பிரதமராகவும், இவரது ஒரு அண்ணன் கோத்தபயா அதிபராகவும் இருந்தனர்.அத்துடன் அவர்களது இரண்டு சகோதரர்கள் அமைச்சராகவும் இருந்தனர்.

இந்த நிலையில் கொரோனா பாதிப்பு, அதைத்தொடர்ந்து பொருளாதார வீழ்ச்சி ஆகியவற்றால் இலங்கையில் பொருளாதார நெருக்கடி நிலை ஏற்பட்டது. இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்தது. இதனால் அதிருப்தியடைந்த மக்கள் போராட்டத்தில் இறங்கினர். அதிபர் மாளிகைக்குள் புகுந்தும் தாக்குதல் நடத்தினர். இதனால் ராஜபக்சேவின் மொத்த குடும்பமும் பதவியை ராஜினாமா செய்து விட்டு தப்பி ஓடினர்.

அதன்பிறகு, கடந்த 2024-ம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலில் மஹிந்த ராஜபக்ச கட்சி மீண்டும் போட்டியிட்டு தோல்வியை தழுவியது. அந்தத் தேர்தலில் போட்டியிட்ட ராஜபக்சவின் மூத்த மகன் நமல் ராஜபக்ச, ஊழல் குற்றச்சாட்டுகளால் தோற்கடிக்கப்பட்டார். இந்த நிலையில், மஹிந்த ராஜபக்சவின் இளைய மகன் யோஷித ராஜபக்சே, பெலியட்டாவில் வைத்து இலங்கை குற்றப் புலனாய்வுத்துறையினர் கைது செய்யப்பட்டுள்ளார். கட்டரகாமாவில் சட்டவிரோதமாக சொத்து சேர்த்த குற்றத்திற்காக அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாகவும் புலனாய்வுத்துறையினர் தெரிவித்தனர்.