உத்தரபிரதேச மாநில முதல்வராக 2வது முறையாக இன்று யோகி ஆதித்யநாத் பதவியேற்கிறார். மாலை 4 மணிக்கு லக்னோவில் உள்ள அடல் பிஹாரி வாஜ்பாய் கிரிக்கெட் மைதானத்தில் பதவியேற்பு விழா நடைபெறுகிறது.
உத்தரபிரதேசத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் மொத்தமுள்ள 403 தொகுதிகளில் பா.ஜனதா கூட்டணி 273 இடங்களை கைப்பற்றி ஆட்சியை தக்க வைத்தது. இந்த வெற்றியின் மூலம் உத்தரபிரதேசத்தில், 37 வருடங்களுக்கு பின்பு ஒரே கட்சி தொடர்ந்து 2வது முறையாக ஆட்சிக்கு வந்துள்ளது. இது இதற்கு முன்பு நடக்காத உபி வரலாறு ஆகும்.
இந்த நிலையில் உத்தரபிரதேச மாநில முதல்வராக 2வது முறையாக இன்று யோகி ஆதித்யநாத் பதவியேற்கிறார். மாலை 4 மணிக்கு லக்னோவில் உள்ள அடல் பிஹாரி வாஜ்பாய் கிரிக்கெட் மைதானத்தில் பதவியேற்பு விழா நடைபெறுகிறது.
இந்த பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத்சிங், பாஜக தேசிய தலைவர் நட்டா உள்பட பலர் கலந்து கொள்ளவிருக்கிறார்கள்.. அதேபோல, சோனியா காந்தி, முலாயம்சிங், மாயாவதி, அகிலேஷ் யாதவ் போன்ற எதிர்க்கட்சி தலைவர்களுக்கும் பதவியேற்பு விழாவில் பங்கேற்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதனையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.