• Tue. Dec 10th, 2024

ஆந்திராவில் முதல் மதிப்பெண் எடுக்கும் மாணவி தற்கொலை .. பின்னனியில் யார்?

Byகாயத்ரி

Mar 26, 2022

ஆந்திர மாநிலத்தில் முதல் மதிப்பெண் எடுத்த பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டத்திற்குட்பட்ட பிரம்மர்ஷி என்னும் பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் மிஸ்பா என்ற மாணவி 10ஆம் வகுப்பு படித்து வந்தார். இவர் எப்போதும் அனைத்து தேர்விலும் முதலிடமே பெற்று வந்திருக்கிறார். அதேபோல், பூஜிதா என்ற மாணவி அனைத்து தேர்விலும் 2அம் இடம் பெற்று வந்துள்ளார்.

இந்த மாணவி ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சுனில் என்பவரின் மகள் ஆவார். இந்நிலையில் திடீரென பள்ளி நிர்வாகம் மாணவி மிஸ்பாவுக்கு டி.சி வழங்கியிருக்கிறது. இதனால் மனமுடைந்த மாணவி மிஸ்பா நேற்று முன்தினம் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.மேலும் தற்கொலைக்கு முன் மாணவி எழுதிய கடிதத்தில் எனது மரணத்திற்கு என் நெருங்கிய தோழியை காரணம், எனவும் என்னை மன்னிக்கவும் அப்பா. இன்று உன்னை விட்டு மீண்டும் வர முடியாத இடத்திற்கு செல்கிறேன். என் மரணத்திற்கு ஒரே காரணம் பூஜிதா என அந்த கடிதத்தில் இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது உறவினர்கள் பள்ளியை முற்றுகையிட்டுள்ளனர். மேலும் ஆளும் கட்சிப் பிரமுகரின் மகன் முதல் மதிப்பெண் பெறுவதற்காக மிஸ்பாவுக்கு டி.சி வழங்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளனர்.