• Sat. Sep 5th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

3-வது முறையாக அதிபர் ஆகிறார் ஜி ஜின்பிங்

ByA.Tamilselvan

Oct 19, 2022

சீன அதிபராக மீண்டும் ஜி ஜின்பிங் தேர்தெடுக்கப்பட உள்ள நிலையில் அவருக்கு எதிராக அங்கு மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
சீன கம்யூனிஸ்டு கட்சியின் உயர்மட்ட முக்கிய கூட்டம் கடந்த 16-ந் தேதி தலைநகர் பீஜிங்கில் தொடங்கி நடைபெற்று கொண்டிருக்கிறது. இதில் ஜின்பிங் 3-வது முறையாக அதிபராக தேர்ந்தெடுக்கப்பட உள்ளார். இதற்கிடையே ஜின்பிங் மீண்டும் அதிபராவதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்த நிலையில் அதிபர் ஜின்பிங்குக்கு எதிர்ப்பு வலுக்கிறது. பீஜிங்கை போல் மற்ற நகரங்களிலும் மக்களின் போராட்டம் பரவியுள்ளது. பீஜிங் உள்பட 8 நகரங்களில் போராட்டம் வெடித்துள்ளது என்று தகவல் வெளியாகி உள்ளது. அமெரிக்கா, இங்கிலாந்து, ஐரோப்பா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் உள்ள பல பல்கலைக்கழக வளாகங்களில் சீன அதிபருக்கு எதிராக போராட்டம் நடந்தது.