• Mon. Oct 6th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

உலக பழங்குடிகள் நாள்

Byதரணி

Aug 9, 2022

பன்னாட்டு உலக பழங்குடிகள் நாளாக ஆகஸ்ட் 9ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு சிறப்பு பரிசாக இந்தியாவின் பாரத பிரதமர் நரேந்திர மோடி பழங்குடியின மக்களின் மீது வைத்திருக்கும் அன்பும் பாசத்தையும் காட்டுகிறது. இந்தியாவின் உயரிய பதவியான ஜனாதிபதி வழங்கி பட்டியல் பழங்குடி மக்களையும் சரித்திரத்தில் இடம்பெறச் செய்திருக்கிறார். இந்தியாவின் முதல் பழங்குடி பெண் ஜனாதிபதியாக திரௌபதி முர்முவுக்கு தலைவர்கள் வாழ்த்து அள்ளி தெளித்தனர்.

திரௌபதி முர்மு இந்தியாவின் முதல் குடிமகளாகவும், ஆயுதப் படைகளின் தளபதியாகவும், முதல் பழங்குடியின மற்றும் இரண்டாவது பெண் ஜனாதிபதி ஆவார். இந்த நாளில் நினைவு கூறுகிறார் சமூக சிந்தனையாளர் பேராசிரியர் முதுமுனைவர் அழகுராஜா பழனிச்சாமி.

முதுமுனைவர் அழகுராஜா பழனிச்சாமி

1982-ம் ஆண்டு முதல் ஐக்கிய நாடுகள் சபை ஆக. 9-ம் தேதியை பழங்குடிகள் தினமாக கடைபிடித்து வருகிறது. பழங்குடிகள் குறித்தும், அவர்களின் உரிமைகள் குறித்தும் மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்து வதை முக்கியக் குறிக்கோளாகக் கொண்டு இந்த தினம் கொண்டாடப்படுகிறது. இந்த தினம் பெருவாரியாக அழியும் நிலையிலுள்ள மொழி களைப் பேசுவது பழங்குடியினரே. இதனால் அவர்களது கலாச்சாரமும், பாரம்பரியமும் அழியும் விளிம்பில் உள்ளன. மொழிகள் என்பது கருத்துப் பரிமாற்றக் கருவியாகவும், அன்றாட மனித வாழ்வில் முக்கிய அங்கமாகவும் உள்ளது. ஒரு மொழி அந்த மொழி பேசும் மனிதர்களின் கலாச்சாரத்தை பாதுகாப்பதற்கும் உதவுகிறது. மொழிகளுக்கு இவ்வளவு முக்கியத்துவம் இருப்பினும் பல்வேறு காரணங்களால் அவை வேகமாக அழிந்து வருகின்றன. இந்தியாவில் 2011 மக்கள் தொகை கணக்கெடுப் பின்படி பழங்குடியினர் சுமார் 104,545,716 பேர் உள்ளனர். உலகில் நான்கில் ஒரு பங்குக்கும் அதிகமான பழங்குடியினர் இந்தியாவில் வாழ்கின்றனர். தமிழகத்தில் சுமார் 36 பட்டியல் பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த சுமார் 80 லட்சம் பேர் வசிக்கின்றனர்.

பழங்குடியின மக்கள் உலகின் மிகவும் பின்தங்கிய மற்றும் அதிகம் பாதிக்கப்படக்கூடிய மக்களாக உள்ளனர். அவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் அவர்களின் தனித்துவமான கலாச்சாரங்களையும் வாழ்க்கை முறையையும் பராமரிக்கச் சிறப்பு நடவடிக்கைகள் தமிழக அரசும் இந்திய அரசும் சிறப்பாக மேற்கொண்டு வருகிறது என்பது மக்கள் அனைவரும் அறிந்த விஷயம்.

தமிழகத்தில் வசிக்கும் காடர், முதுவர், இருளர், ஊராளி, சோளகர், அடியன், தொதவர், கோத்தர், பணியர், காட்டு நாயக்கர், குறும்பர் உள்ளிட்ட பழங்குடியினர் தங்கள் பூர்வீக பழங்குடியின மொழிகளைப் பேசுகின்றனர். அரசும், பல்கலைக்கழகங்களும், தன்னார்வ நிறுவனங்களும், இதில் ஒருசில பழங்குடியின மக்கள் பேசும் தனித்த மொழிகள் குறித்து சில ஆய்வுகளை மேற்கொண்டுள்ளன. ஆனாலும், இம்மொழிகளுக்கு எழுத்து வடிவம் அளிக்கும் பணி இன்னும் முழுமையடையவில்லை. இதுவரை எழுத்து வடிவம் பெறாத பழங்குடிகளின் மொழிக்கு உடனே அரசு போதுமான நிதி ஒதுக்கி அவற்றுக்கு எழுத்து வடிவம் அளிக்க வேண்டும் என்பதை பழங்குடி மக்களின் சமூக ஆர்வலர்களின் நோக்கம். தொல்பழங்குடிகளான குறிஞ்சி நில மக்களின் உரிமைகளை ஊக்குவிக்கவும், அவ்வுரிமைகளைப் பாதுகாக்கவும் இத் தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்நிகழ்வானது அப்பழங்குடியின மக்கள் சுற்றுச்சூழல் பாதுகாப்பு போன்ற உலக பிரச்சினைகளின் எடுக்கும் நல்லெண்ண முடிவுகளுக்கு அங்கீகாரமாகப் பார்க்கப்படுகிறது.

ஐந்திணை நிலம் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை நிலத்தில் வாழ்ந்தவர்கள் வேடுவர் என்ற குறவர்கள் இவர்களே மூத்தபழங்குடியினர் ஆவர். உலகில் இத்தகைய மக்கள் அதிக எண்ணிக்கையில் வாழ்கின்றனர். ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு பெயர்களில் வாழ்ந்து வருகின்றனர்.உலகில் முதலில் தோன்றிய மக்களே பழங்குடியினர். இவர்களுக்கான எழுச்சி நாள் உலகம் முழுவதும் ஆகஸ்ட் 9 அன்று பழங்குடிகள் தினமாக கொண்டாடப்படுகின்றது.

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கடந்த ஆண்டு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் சமூகப் பொருளாதார மற்றும் கல்வி வளர்ச்சிக்காக தமிழக அரசு பல்வேறு நலத் திட்டங்களை அறிவித்துச் செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், மாநில அளவில் ஆதிதிராவிடர்கள், பழங்குடியினர் ஆகியோருடைய சட்டப்பூர்வமான உரிமைகளைப் பாதுகாக்கவும், அவர்களுடைய முக்கியமான பிரச்சினைகளுக்குத் தீர்வு காணவும், ‘தமிழ்நாடு ஆதிதிராவிடர் – பழங்குடியினர் நல ஆணையம்’ என்கிற புதிய அமைப்பு ஒன்றைத் தன்னாட்சி அதிகாரத்துடன் செயல்படும் வகையில் உருவாக்கிட உரிய சட்டம் இயற்றப்படும் என்று தமிழக சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டு அதில் ஆனைமலையை சேர்ந்த ஆனைமலை லீலாவதி தனராஜ் திருநெல்வேலி, பொள்ளாச்சி மலைப் பகுதிகளில் வாழும் பழங்குடியின மக்களின் கல்வி மேம்பாட்டுக்கு மாலை நேரக் கல்வி மையம் வாயிலாக கல்வி மற்றும் பழங்குடியினர் கலையைப் பயிற்றுவித்து வருபவர் தமிழக முதல்வர் திராவிடம் மாடல் ஆட்சியை தமிழகத்தில் நடைமுறைப்படுத்திக் கொண்டு வருகிறார். அதை குறிப்பாக பட்டியலின மக்கள் மற்றும் வழங்க வேண்டிய மக்களின் வாழ்க்கைத் தரத்தையும் கல்வி தரத்தையும் பொருளாதாரத்தையும் வேலைவாய்ப்பையும் ஏற்படுத்துவதில் முனைப்பாக செயல்பட்டு வருகிறார். கடந்த ஒரு ஆண்டுகளில் தமிழக முதல்வரின் செயல்பாடு மக்களின் அளவற்ற வரவேற்பையும் பொதுமக்களின் நன்மதிப்பையும் வருங்கால இளைஞர்களின் வேலை வாய்ப்புகளை உருவாக்குவது பெண்களை பாதுகாப்பது சட்ட ஒழுங்குகளை சரியான முறையில் கையாண்டு வருகிறார்.

பொதுமக்களின் அன்பைப் பெற்ற ஒரே முதல்வர் இந்தியா முழுவதும் உள்ள 28 மாநிலங்களில் சிறப்பாக ஆட்சி செய்யும் ஒரே முதல்வர் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் என்பது பல்வேறு செய்தித்தாள்களிலும் அனைவரும் படித்தறிந்தது. தமிழகத்தில் அதனை நேரடியாக கண்கூடாக மக்கள் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். பழங்குடியின மக்களுக்கு மென்மேலும் கல்வி பொருளாதாரம் மற்றும் பல்வேறு கல்வி நிலை முன்னேறி அனைத்து சமுதாய மக்களுடன் சமநிலை பெற என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என கூறியுள்ளார்.