• Thu. Apr 18th, 2024

தங்களது சொந்த ஊர்களில் பணியாற்றங்கள், தொழில் தொடங்குங்கள் -தொழிலதிபர் ஸ்ரீதர்வேம்பு

Byp Kumar

Mar 31, 2023

மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரியில் zohoநிறுவனத்தின் தலைவர் இந்திய தொழிலதிபர் ஸ்ரீதர்வேம்பு இந்தியர்கள் தொழில்நுட்பத்தை உருவாக்கி உலகுக்கு வழங்குவதாக இருக்க வேண்டும் அப்துல்கலாம் கனவு கண்டது போல் தங்களது சொந்த ஊர்களில் பணியாற்றங்கள். தொழில் தொடங்குங்கள் என 65 ஆவது கல்லூரி நாள் விழாவில்பேசினார்.
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் அமைந்துள்ள தியாகராஜர் பொறியியல் கல்லூரியின் 65 ஆவது கல்லூரி நாள் விழா சிறப்பாக நடைபெற்றதுஇந்த விழாவில் TC E கவரீனிங் கவுன்சில் உனுப்பினாராகிய ஹரிதியாகராசன் விழா வரவேற்புரையும் தலைமையுரையும் வழங்கினார்கள்.தனது உறையில், சிறப்பு விருந்தினர் ஸ்ரீதர் வேம்பு , கலாம்’அய்யா, அவர்களின் கனவுக்கேற்ப நகரங்களின் வசதிகளை கிராமபுறத்தில் வழங்கும் நோக்கத்தோடு zoho நிறுவனத்தை தென்காசியில் தொடங்கி இயக்கி வருகிறார் அதோடு ஊரக பகுதிகளில் zoho பள்ளிகளையும் நடத்தி வருகிறார்.
என்று குறிப்பிட்டார். அடுத்ததாக, கல்லூரி முதல்வர் முனைவர் பழனிநாதராஜா அவர்கள் கல்லூரியின் ஆண்டறிக்கைமை வழங்கினார் சூர்யபிரகாஷ், பிரீத்தம் மீனாட்சி, வைஷ்ணவி மற்றும் சுபாஷ் ஆகிய மாணவர்களுக்கு சிறந்த மாணவர்களுக்கான விருது வழங்கப்பட்டன.


தொடர்ந்து சிறப்பு விருந்தினர் அவர்கள் சிறப்புரையில், செயற்கை நுண்ணறிவு புரட்சியானது, மனிதர்களை வேலையின்றி ஆக்ககூடும். இன்றைய வேலை இன்னும் ஐந்தாண்டில் இல்லாமல் போய்விடக்கூடும் இந்த நிலையாத் தன்மையே இன்றைய தொழில் நுட்பத்தின், இன்றியமையாத, அம்சமாக இருக்கும் எனவே பொறியாளர்கள் தங்களுக்கு கிடைகின்ற வாய்ப்பினை தவறு விடக்கூடாது என்று வலியுறுத்தினார்.வரும் காலத்தில் மென்பொருள் பரவலாகவும் மலிவாகவும் இருக்கும். ஆனாலும் அவை இயந்திரங்களுக்கு மாற்றாக அமைய முடியாது.எனவே பொறியாளர்கள், உணவு, உறைவிடம், உடல்நலம் மற்றும் கல்வி ஆகிய துறைகளில் உள்ள சவால்களை எதிர் கோண்டு அதிநவீன சென்ஸார்கள் கொண்டு தீர்வுகள் வழங்க வேண்டும் ஆகவே சென்ஸார் தொழில்நுட்பத்தில் நாம் வல்லாமை பெற வேண்டும்zoho நிறுவனத்தில் 2000ஆமாது ஆண்டில் இருந்த தயாரிப்புகள் இப்போது பயன்பாட்டில் இல்லை. எனவே நாங்கள் கிலவுட் கம்ப்யூட்டிங் (cloud Compatiர்வு) துறையில் பணியாற்ற தொடங்கினோம் வரும் காலங்களில் மென்பொருளை, விடுத்து வேறு தொழில்நுட்பத்தி முதலீடு செய்யும் கட்டாயத்தில் இருக்கின் றோம்.எனவே இந்தியர்கள் தொழில்நுட்பத்தை உருவாக்கி உலகுக்கு வழங்குவதாக இருக்க வேண்டும் அப்துல் கலாம்கனவு கண்டது போல் தங்களது சொந்த ஊர்களில் பணியாற்றங்கள் தொழில் தொடங்குங்கள் அவற்றை பிற ஊர்களுக்கு எடுத்துச் செல்லுங்கள்மாணவர்களே அச்சப்படாதீர்கள் அடுத்த பத்து ஆண்டுகள் எதிர்நோக்கி திட்டமிடுங்கள் ஆக்கபூர்வமாக புத்தாக்க சிந்தனையுடன் செயல்படுங்கள் மென்பொருளையும் தாண்டி உலக பிரச்சனை தீர்க்க முன் வாருங்கள் என்று பேசினார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *