


விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் அனைத்திந்திய மாதர் சங்கம் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக கேஸ் விலை உயர்வை கண்டித்து பெண்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவில்லிபுத்தூர் இடைய பொட்டல் தெருவில் அனைத்திந்திய மாதர் சங்கத்தின் சார்பாக கிளை தலைவர் லதா தலைமையில் பெண்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். துணைத் தலைவர் ரேணுகா தேவி ஆர்ப்பாட்டத்தில் விளக்கி பேசினார்.


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக நம்பி நாயுடு தெருவில் கேஸ் விலை உயர்வை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட குழு உறுப்பினர் திருமலை, நகர் செயலாளர் ஜெயகுமார் , நகர்குழு உறுப்பினர் ரேணுகா தேவி, பிச்சைகனி ஆகியோர் ஆர்ப்பாட்டத்தில் பேசினர்.
உடனடியாக கேஸ் உயர்வை வாபஸ் பெற வேண்டும் மக்களின் அன்றாடத் தேவையை கருத்தில் கொண்டு ஒன்றிய அரசு உடனடியாக கேஸ் உயர்வை ரத்து செய்ய வேண்டும். இல்லை என்றால் மிகப்பெரிய போராட்டங்கள் இந்தியா முழுவதும் நடைபெறும் என பேசினார்கள் ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான பெண்களும், ஆண்களும் கலந்து கொண்டனர்.

