• Fri. Apr 18th, 2025

விபத்தில் ‌முதியவர் பலி..,

ByT. Vinoth Narayanan

Apr 10, 2025

சிவகாசி ஆனையூரை சேர்ந்தவர் , கோப்பையநாயக்கன்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் தமிழ் ஆசிரியராக பணிபுரிந்து வருபவர்,கோகுலகிருஷ்ணன் (வயது 58) இவரது மனைவி புஷ்பலதா மதுரை தத்தனேரி இ எஸ் ஐ மருத்துவமனையில் செவிலியர் கண்காணிப்பாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது மகன் ஸ்ரீ விஷ்ணு பிலிப்பைன்ஸ் நாட்டில் எம்பிபிஎஸ் படித்து தற்போது வேலைக்காக வீட்டில் காத்திருக்கிறார். இவரது மகள் ஸ்ரீவர்ஷினி சிவராஜ் சித்த வைத்திய சாலையில் கடைசி ஆண்டு படித்து வருகிறார்.

நேற்று மதியம் 03.15 மணியைப் போல் கோபாலகிருஷ்ணன் மகன் ஸ்ரீ விஷ்ணு வீட்டிலிருந்த போது கோபாலகிருஷ்ணன் செல்போனில் பேசிய காளிஸ்வரி பயர் ஒர்க்ஸ் வாட்ச்மேன் திருவில்லிபுத்தூர் TO சிவகாசி மெயின் ரோட்டில் மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி சாமிநத்தம் காளிஸ்வரி பயர்ஒர்க்ஸ் அருகில் கோபாலகிருஷ்ணன் இரண்டு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தவர் நிலை தடுமாறி ரோட்டின் ஒரத்தில் நின்று கொண்டிருந்த யார் என்று தெரியாத நபர் மீது மோதி கீழே விழுந்து விட்டதாகவும், மேற்படி விபத்தில் கோபால கிருஷ்ணனுக்கு கை,கால்களில் சிராய்ப்பு காயங்களும், காதில் ரத்தம் வழிந்த நிலையில் பேச்சு மூச்சு இல்லாமல் இருந்ததாக கூறினார். உடனடியாக கோபாலகிருஷ்ணன் மகன் ஸ்ரீ விஷ்ணு இதனை அவரது அம்மாவிற்கு தகவல் தெரிவித்து விட்டு விபத்து நடந்த இடம் சென்று பார்த்த போது தனது அப்பா பேச்சு மூச்சு இல்லாமல் இருந்ததாகவும்,

பின்னர் அங்கிருந்தவர்கள் உதவியுடன் சிவகாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றதாகவும், பின்னர் கோபாலகிருஷ்ணன் உடல்நிலையை கருத்தில் கொண்டு விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததாகவும், மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது உடல் அசைவில்லாமல் இருந்ததாகவும், மீண்டும் சிவகாசி அரசுமருத்துவமனைக்கு கொண்டு வந்து பரிசோதித்த மருத்துவர், கோகுல கிருஷ்ணன் இறந்து விட்டதாக தெரிவித்த அடிப்படையில் மல்லி காவல் நிலையத்தில் கோபாலகிருஷ்ணன் மகன் ஸ்ரீ விஷ்ணு புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.