

கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று வனத்துறை அமைச்சர் பொன்முடி விழா ஒன்றில் பெண்களைப் பற்றியும் மற்றும் இந்து சமய சைவ மற்றும் வைஷ்ணவ பற்றியும் மிகவும் இழிவாக பேசியது பெண்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
தற்பொழுது இந்த பேச்சு இணையத்தில் அதிக அளவு வைரலானது அடுத்து திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி உள்ளிட்டோர் கண்டனத்தை தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து இவர் கட்சிப்பதவி துணைப் பொதுச் செயலாளர் என்ற பதவி பறிக்கப்பட்டுள்ளது. பெண்கள் கூறுகையில் இவர் வீட்டில் எந்த இதில் இருக்கிறார்கள்.


மேலும் இவரை கட்சிப் பதவியில் மட்டுமில்லாமல் அமைச்சர் பதவியில் இருந்தும் நீக்க வேண்டும் எனவும் ஏற்கனவே இலவசமாக பஸ்ஸில் பெண்கள் பயணம் செய்வதாகவும் ஒரு தாழ்த்தப்பட்ட ஊராட்சி மன்ற தலைவரை மேடையிலேயே வைத்து அவமரியாதை செய்தார் எனவும் குற்றச்சாட்டை பெண்கள் வைக்கின்றனர். இது போன்று தொடர்ந்து பெண்கள் மீது இவர் வன்மம் கொண்டு இருப்பதாக பெண்கள் குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர். இவர் கட்டாயமாக அமைச்சர் பதவி நீக்கி இவரை மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் என பெண்கள் கோரிக்கை விடுக்கின்றனர். இல்லை என்றால் மிகப்பெரிய போராட்டங்கள் வெடிக்கும் என பெண்கள் அமைப்புகள் தெரிவிக்கின்றனர்.

