• Mon. Apr 28th, 2025

மதுரை வீரகாளியம்மன் கோவில் பங்குனி திருவிழா..,

ByKalamegam Viswanathan

Apr 11, 2025

மதுரை ஜெய்ஹிந்திபுரத்தில் மிக பழமையான ஸ்ரீ வீரகாளியம்மன் கோவில் உள்ளது, இந்த கோவிலின் 73 ஆவது ஆண்டு பங்குமி உற்சவ விழா கொடியேற்றம் மார்ச் 21 ஆம் தேதி நடைபெற்றது. அதனை தொடர்ந்து ஏப்ரல் 4 ஆம் தேதி காப்பும் கட்டும் நிகழ்வும், அம்மனுக்கு தினமும் காலை, மாலை சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

இந்நிலையில் விழாவின் சிகர நிகழ்வாக இன்று காலை 5 மணி முதல் 15,000 மேற்பட்ட பக்தர்கள் வைகை ஆற்றில் இருந்து தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றும் வகையில் ஜெய்ஹிந்த்புரம் வீரகாளியம்மன் கோவிலுக்கு அலகு குத்தியும், பால் குடம் எடுத்தும், வேல்குத்தியும், பறவை காவடி எடுத்தபடியும் வைகை ஆற்றில் இருந்து ஜெய்ஹிந்த் புரம் வரை ஊர்வலம் சென்றனர்.

இதில் 10,000 மேற்பட்ட பக்தர்கள் பால்குடம் எடுத்தும், 5,000 மேற்பட்டோர் பக்தர்கள் வேல் குத்தியபடியும், 50 க்கும் மேற்பட்ட 5 அடுக்கு, 3 அடுக்கு என 50 அடி முதல் 30 அடி வரை பறவை காவடி, தேர்காவடி, பால்காவடி, எடுத்தும் தங்களது நேர்த்திகடன்களை செலுத்தினர்கள். 15,000 மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு ஊர்வலமாக சென்றதால் மாநகர் சாலைகள் முழுவதிலும் திருவிழா கோலம் பூண்டது. இந்த விழாவினை தொடர்ந்து நாளை ஊர்ப் பொங்கல், அக்னி சட்டி, முளைப்பாரி ஊர்வலம், 14 ஆம் தேதி திருவிளக்கு பூஜையும் நடைபெறுகிறது.