



திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் தாலுகா கன்னிவாடி காவல் நிலையத்திற்குட்பட்ட கொடைக்கானலுக்கு செல்லக்கூடிய தருமத்துப்பட்டி – பன்றிமலை அமைதி சோலை அருகே 60 அடி பள்ளத்தில் ஆதிமூலம் நீரோடை அருகே நேற்று (13.04.25) இரவு 22 வயது முதல் 30 வயதிற்குட்பட்ட அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் எரிந்த நிலையில் இருப்பதாக அங்கு கால்நடை மேய்ச்சல் செய்பவர்கள் கன்னிவாடி காவல் துறையினருக்கு தகவல் அளித்தனர்.

உடனடியாக கன்னிவாடி காவல் துறையினர் வனப்பகுதிக்கு சென்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இறந்த பெண் யார் என்று தெரியாத நிலையில், கன்னிவாடி காவல்நிலைய காவலர்கள் விசாரணை செய்து வருகின்றனர்.
விசாரணைக்கு பின்பு இளம்பெண் யார்? அவர் கொலை செய்யப்பட்டாரா? தற்கொலைக்கு முயற்சி செய்தாரா? என்ற காரணம் மற்றும் விவரங்கள் தெரியவரும்.
மேலும் சம்பவம் குறித்து ஒட்டன்சத்திரம் டி.எஸ்.பி கார்த்திகேயன் மேற்பார்வையில் கன்னிவாடி காவல் ஆய்வாளர் சிவக்குமார் தலைமையில் தனிக்குழு அமைத்து விசாரணை செய்ய உள்ளனர்.
மேலும் சம்பவம் நடந்த பகுதியில் வழித்தடத்தில் இருக்கும் கிராமத்தில் உள்ள சிசிடிவி கேமராக்களை காவல்துறையினர் ஆய்வு செய்து விசாரணையை தொடங்க உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

