• Sun. Aug 30th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

மும்மொழி வெளியீடு வலிமைக்கு வலிமை சேர்க்குமா?

வினோத் இயக்கத்தில், யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில், அஜித்குமார், ஹுமா குரேஷி, கார்த்திகேயா மற்றும் பலர் நடிக்கும் ‘வலிமை’ படம் 2022 பொங்கலுக்கு வெளியாக உள்ளது. இப்படத்தை தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் வெளியிட போனி கபூர் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தெலுங்கில் படத்திற்கு ‘பலம்’ என்றும் பெயர் வைத்துள்ளார்களாம்.

தெலுங்கு நடிகரான கார்த்திகேயா இப்படத்தில் வில்லனாக நடிப்பதால் தெலுங்கில் வெளியாகும் போது அங்குள்ள ரசிகர்களின் வரவேற்பு கூடுதலாகக் கிடைக்க வாய்ப்புள்ளது.

அஜித்தின் படங்கள் இந்தியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு யூடியூபில் அதிக பார்வைகளை பெற்றுள்ளது. எனவே, அவருக்கென இந்தியிலும் ரசிகர்கள் உள்ளார்கள். மேலும், படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் இந்தி திரையுலகைசேர்ந்தவர் என்பதால் இந்தியில் அவரால் படத்தை எளிதில் வெளியிட முடியும்.
இதற்கான அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.