

தெலுங்கு நடிகர் பிரபாஸ் பத்து வருடங்களுக்கு பின் நடித்திருக்கும் காதல் கதையம்சம் கொண்ட படம் ராதேஷ்யாம் இதில் இவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே மற்றும் பலர் நடித்துள்ளனர் ராதாகிருஷ்ணகுமார் இயக்கியுள்ள இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகர் இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் டிரைலர் சில தினங்களுக்கு முன்பு தெலுங்கு, இந்தி, தமிழ், கன்னடம், மலையாளம் ஆகிய நான்கு மொழிகளில் யூடியூபில் வெளியிடப்பட்டது. வெளியான 24 மணி நேரத்தில் அனைத்து மொழிகளிலும் 64 மில்லியன் பார்வைகளைப் பெற்று புதிய சாதனையைப் படத்துள்ளது. இதன் மூலம் ‘பாகுபலி 2’ டிரைலர் 24 மணி நேரத்தில் படைத்த சாதனையை முறியடித்துள்ளது.
அந்த சாதனையை ‘ஆர்ஆர்ஆர்’ டிரைலர் முறியடிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ‘ராதே ஷ்யாம்’ டிரைலர் முறியடித்துள்ளது. இதன் மூலம் பிரபாசுக்கான அகிலஇந்திய செல்வாக்கு சினிமா ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது தெரிய வந்துள்ளது.
தெலுங்கு டிரைலரை விட இந்தி டிரைலர் அதிகப் பார்வைகளைப் பெற்றுள்ளது.தற்போது இந்தி டிரைலர் 38 மில்லியன் பார்வைகள், தெலுங்கு டிரைலர் 31 மில்லியன் தமிழ் டிரைலர் 5 மில்லியன்கன்னட டிரைலர் 2 மில்லியன் மலையாள டிரைலர் 3 மில்லியன் பார்வைகைளப் பெற்று மொத்தமாக 80 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது.
‘ராதே ஷ்யாம்’ 2022ம் ஆண்டு ஜனவரி 14ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது. இதன் மூலம் பிரபாஸ் இந்தி நடிகர்களை காட்டிலும் அனைத்து தரப்பு சினிமா ரசிகர்களையும் வசீகரித்த நடிகராக மாறியுள்ளார் என்பதை மறுக்க முடியாது.
