• Thu. Oct 15th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

14அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்..,

ByAjmalkhan saleemraja

Oct 15, 2026

தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு முன்பாக தமிழ்நாடு அரசு அனைத்து மருந்தாளுனர் சங்கத்தினர் சார்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த விஷயத்தில் தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு அரசு அனைத்து மருந்தாளுனர் சங்க தேனி மாவட்ட தலைவர் மூர்த்தி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக முழுவதும் மக்கள் நல வாழ்வுத்துறையில் காலியாக உள்ள 1200க்கும் மேற்பட்ட காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்.

மக்கள் நல வாழ்வுதுறையில் பதவி உயர்வு பணியிடங்களை உருவாக்கிட வேண்டும். நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவ குறியீட்டின்படி கூடுதல் மருந்தாளுனர்களை உருவாக்க வேண்டும்

அனைத்து இயக்குநகரத்திலும் மருந்தாளுனர் மாற்று ஆணையை ரத்து செய்ய வேண்டும்.

அரசு ஆரம்ப சுகாதார நிலையம் முதல் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வரை மருந்துகளை உரிய தட்பவெப்ப நிலையில் பராமரித்திட குளிர் பதன வசதிகளுடன் முறையான மருந்து கிடங்குகள் அமைக்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டதோடு,

இதனை நிறைவேற்றி தர வேண்டுமென தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையிலும், தமிழக அரசுக்கு கண்டனத்தை தெரிவிக்கும் வகையிலும் கோஷங்கள் எழுப்பப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் தேனி மாவட்டம் முழுவதிலும் இருந்து தமிழ்நாடு அனைத்து அரசு மருந்தாளுனர் சங்கத்தினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.