தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள சூழலில் சென்னை, திருவள்ளூர் செங்கல்பட்டு, திண்டுக்கல்,மதுரை, தேனி,விருதுநகர், நீலகிரி,கோவை, சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்த சூழலில்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகர் பகுதி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளான ஆண்டிபட்டி கணவாய் பகுதி, செட்டியபட்டி, தொட்டப்பநாயக்கனூர், நக்கலப்பட்டி, தி.விலக்கு, ஏ. இராமநாதபுரம், எழுமலை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மின்னலுடன் கூடிய கனமழை சுமார் ஓரு மணி நேரத்திற்கு மேலாக பெய்தது.,

இந்த கனமழையால் உசிலம்பட்டி நகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சாலையில் மழை நீர் பெருக்கெடுத்து ஆறாக ஓடுடியது.,

கடந்த சில நாட்களாக உசிலம்பட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில் இந்த கனமழையால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.



