• Sat. Sep 5th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

தொகுதிகளில் தீர்க்கப்படாத பிரச்சனை.. இபிஎஸ்-க்கு கடிதம் அனுப்பிய முதல்வர்..

Byகாயத்ரி

Aug 23, 2022

கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சியமைத்த நிலையில் முதல்வராக மு.க.ஸ்டாலின் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் அனைத்து தொகுதி எம்.எல்.ஏக்களுக்கும் கடிதம் எழுதியுள்ளார். அதில் தங்கள் தொகுதிகளில் நீண்ட காலமாக தீர்க்கப்படாமல் உள்ள 10 பிரச்சினைகளை பட்டியலிட்டு 15 நாட்களுக்கு மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார். அந்த வகையில் எடப்பாடி தொகுதி எம்.எல்.ஏவும், எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமிக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. எடப்பாடி தொகுதியில் தீர்க்கப்படாமல் உள்ள 10 முக்கிய கோரிக்கைகளை குறித்து 15 நாட்களில் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்புமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து கூறியுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் “என்னுடைய தொகுதியானாலும், எதிர்கட்சி தலைவரின் தொகுதியானாலும், முதல்முறை எம்.எல்.ஏ ஆனவரின் தொகுதியானாலும் அனைத்து தொகுதிகளிலும் உள்ள தலையாய பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும்” என்று கூறியுள்ளார்.