• Mon. May 20th, 2024

அசாம் மக்களை பலி வாங்கும் காட்டு காளான்கள்

அசாம் மாநிலத்தின் திப்ருகர் மாவட்டத்தில் உள்ளது எண் 4 சப்படோலி கிராம். இங்கு 800க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களில் பலர் ஆதிவாசி மக்கள். அங்குள்ள தேயிலை தோட்டத்தில் தினக்கூலிகளாக வேலை பார்த்து வரும் இவர்களில் சிலர் காட்டுக்காளாண்களை சாப்பிட்டு உயிரிழந்ததாக செய்திகள் வெளியானது. இது குறித்து ஆய்வு நடத்திய தனியார் செய்தி நிறுவனம் ஒன்று பல்வேறு தகவல்களை ஆதாரத்துடன் திரட்டி அதை கட்டுரையாக வெளியிட்டுள்ளது.

சப்படோலி கிராமத்தை சேர்ந்தவர் ராஜேஷ் காரியா, இவர் அதே பகுதியில் உள்ள ஒரு தேயிலை தோட்டத்தில் தினக்கூலியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த ஏப்ரலம் மாதம் 8ஆம் தேதி தேயிலை தோட்டத்தில் தனது பணியை முடித்து விட்டு வீடு திரும்பிய ராஜேஷ் காரியா, அங்கிருந்த காட்டு காளாண்களை பறித்து வந்துள்ளார். அந்த காளாண்களில் பாதியை தன் குடும்பத்திற்காக எடுத்துக்கொண்டு மீதமிருந்த காளாண்களை அக்கம் பக்கத்தில் உள்ள வீட்டாருக்கு கொடுத்துள்ளார்.

அடுத்த நாளே காரியா உள்ளிட்ட 11 பேருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனை அடுத்த ஏப்ரல் 11ஆம் தேதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த காரியாவின் மூத்த மகள் மற்றும் பக்கத்து வீட்டை சேர்ந்த சைன் லமா ஆகிய இருவரும் உயிரிழந்துள்ளனர். அடுத்த நாளே லமாவின் மனைவியும் உயிரிழந்துள்ளார். காரிய கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இது குறித்து காரியாவின் மனைவி அஞ்ஜலி காரியாவிடம் கேட்டபோது, காளாண் சாப்பிட்டதால்தான் இவர்கள் உயிரிழந்துள்ளார்கள் என்பதை தன்னால் நம்ப முடியவில்லை எனவும், நீண்ட காலமாக காட்டு காளாண்களை தாங்கள் உட்கொண்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். அதனை தொடர்ந்து, அதற்கு இடைப்பட்ட நாட்களில் மேல் அசாமில் வசித்து வந்த மக்களில் 16 பேர் காட்டு காளாண்களை சாப்பிட்டு உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல, அதே பகுதியை சேர்ந்த 39 பேரும், டிமா ஹசாவோவைச் சேர்ந்த 6 பேரும் என 40க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளனர்.

இது குறித்து அப்பகுதி மக்களிடம் கேட்டபோது, நாங்கள் தேயிலை தோட்டங்களில் தினக்கூலிகளாக வேலை செய்து வருகிறோம். எங்களுக்கு நாள் ஒன்றுக்கு 130இல் இருந்து 180 ரூபாய் வரை மட்டுமே கூலியாக கிடைக்கிறது. நாங்கள் குறைந்தது நாள் ஒன்றுக்கு 300 ரூபாயாவது கூலி வேண்டும் என நீண்ட நாளாக போராடி வருகிறோம். ஆனால் இன்று வரை அதற்கான எந்தவித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை. தனியார் தேயிலை தோட்ட உரிமையாளர்கள் ஏற்கனவே கொடுத்து வரும் கூலியையும் குறைக்கத்தான் நினைக்கிறார்களே தவிற எங்களின் வருமை குறித்து அவர்கள் சிந்திக்கவில்லை.

அது மட்டும் இன்றி காய் கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வால் அன்றாட வாழ்கையை கூட நெருக்கடி இல்லாமல் கடத்த முடியாத சூழலில் சிக்கி தவிக்கிறோம். அதனால் காடுகளில் இருந்து கிடைக்கும் உணவுப்பொருட்களை நம்பி வாழ வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளோம். அதேபோல அரசும் எங்களுக்கு இந்த காளாண்களை உட்கொள்ளலாமா கூடாதா என்ற எவ்விதமான விழிப்புணர்வையும் ஏற்படுத்தவில்லை. இந்த சூழலில் வருமையில் வாழும் நாங்கள் காட்டு காளாண்களை உட்கொண்டோம் ஆனால் எங்கள் குடும்பங்களை சேர்ந்த பலரே உயிரிழிந்து விட்டனர் எனக்கூறுகின்றனர்.

இது ஒரு பக்கம் இருக்க மற்றொரு தகவல் என்னவென்றால் அங்குள்ள தேயிலை தோட்டங்களில் அதிகபடியான பூச்சி கொல்லி மருந்துகள் அடிக்கப்படுவதாக கூறப்படுகிறது. இதனால் மழை காலத்தில் மண்ணில் இருந்து பொட்டி முளைக்கும் காளாண்களில்லும் பூச்சி கொல்லி மருந்தின் விஷ தன்மை அதிக அளவில் இருக்கும் என கருதப்படுகிறது. இதை உணவுப்பொருளாக நினைத்து பறித்து சென்று சாப்பிட்டதால் பலர் உயிரிழக்க நேர்ந்திருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

வருமையால் வாடும் அசாம் மாநில தேயிலை தோட்ட தொழிலாளர்கள் காட்டில் இருந்து கிடைக்கும் உணவுகளை நம்பி வாழும் கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர். அது மட்டும் இன்றி அவர்களுக்கு சராசரியாக வழங்கப்பட வேண்டிய கூலியும் வழங்கப்படுவது இல்லை. இது அம்மாநில அரசின் கவனத்திற்கு சென்று அப்பாவி மக்களின் வாழ்கை காப்பாற்றப்பட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகவும் உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *