• Fri. Apr 19th, 2024

மஞ்சூர் பெனிஸ்டாக் காவலர் குடியிருப்பபை சேதப்படுத்திய காட்டு யானைகள்

நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே காவலர் குடியருப்பை காட்டுயானைகள் சேதப்படுத்தியதால் பொதுமக்களிடம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அடுத்த பெனிஸ்டாக் மின்வாரிய கட்டுப்பாட்டில் இயங்கி வருகின்றன.கெத்தை அணைக்கு செல்லும் வால்வு பகுதி பாதுகாப்பு பணிக்காக சிறப்பு காவல் படை காவலர்கள் பணியாற்றி வருகின்றனர் நேற்று இரவு காவலர்களின் குடியிருப்பின் கதவுகளை தட்டியவாறு நான்குக்கும் மேற்பட்ட காட்டு யானைகள் பிழறியபடி அருகே இருந்த பொருட்களை சேதப்படுத்திக் கொண்டிருந்தது. பணியில் இருந்த காவலர்கள் குடியிருப்பினுள் சப்தமின்றி அமைதியாக இருந்தனர்.


மஞ்சூர் காவல் நிலையத்திர்கு தொலைபேசி மூலமாக தகவல் தெரிவித்தனர் உதவி ஆய்வாளர் சசிகுமார் மற்றும் வன காவலர் துறை காவல் வாகனம் மூலம் இரவோடு இரவாக யானைக் கூட்டத்திடம் சிக்கி இருந்த காவலர்களை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். மஞ்சூர் காவல் நிலையம் மூலம் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தலைமை காவலர் சுரேஷ், உதவி ஆய்வாளர் சசிகுமார், வனச்சரகர் சீனிவாசன், வனவர் பிச்சை வனக்காப்பாளர் அர்ஜுனன், சம்பவ இடத்தை பார்வையிட்டு யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டனர் பணியில் இருக்கும் காவலர்களுக்கு வன விலங்குகளிடமிருந்து பாதுகாப்பு வழங்கிட நடவடிக்கை வனத்துறை உறுதியளிக்க கேட்டுக் கொள்ளப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *