• Fri. Apr 26th, 2024

வட்டாட்சியர் அலுவலகம் முன் அரசு ஊழியர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்

நீலகிரி மாவட்டம் மஞ்சூர் குந்தா வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கோரிக்கைகளை நிறைவேற்றித் தராத தமிழக அரசை கண்டித்து சாலை பணியாளர்கள் நீலகிரி மாவட்ட செயலாளர் இளங்கோவன் தலைமையில் துணை செயலாளர் கனகரத்தினம் முன்னிலையில் நெடுஞ்சாலைத் துறை ஊழியர்கள் வருவாய் துறை ஊழியர்கள் கோரிக்கைகளான புதிய ஓய்வூதியத்தினை ரத்து செய்து அனைவருக்கும் பயனளிக்கும் பழைய. ஓய்வூதியத்தினை வழங்கிட வேண்டும்
அரசுத் துறைகளில் காலியாக உள்ள நான்கு லட்சம் பணியிடங்களை நிரப்பி வேண்டும்.படித்துவிட்டு வேலையில்லா இளைஞர்களுக்கு காலமுறை ஊதியத்தில் வழங்கிட வேண்டும் .


மறுக்கப்படும் அளவிலைப்படி மடக்கப்பட்ட சரண் விடுபை உடனே வழங்கிட வேண்டாம் மாநகராட்சி நகராட்சிகளின் நிரந்தர பணியிடங்களை அழித்திடும் அரசாணை 152 ரத்து செய்திட வேண்டும் தமிழக அரசின் காலை சிற்றுண்டி திட்டத்தினை சத்துணவு ஊழியர்களைக் கொண்டு முழுமையாக அமல்படுத்திட வேண்டும் அரசு துறைகளில் ஒப்பந்த தின கூலி அவுட்சோர்சிங் சி முறைகளை ரத்து செய்து காலமுறை ஊதியத்தில் காலிப் பணியிடங்களில் நிரப்பிட வேண்டும்
சத்துணவு அங்கன்வாடி வருவாய் கிராம உதவியாளர்கள் எம்ஆர்பி செவிலியர்கள் உட்புற நூலகர்கள் பண்ணை பணியாளர்கள் உள்ளிட்ட தொகுப்பூதிய சிறப்பு கால முறை ஊதியம் பெறும் ஊழியர்களை நிரந்தரப்படுத்தி காலம்முறை ஊதியம் வழங்கிட வேண்டும். சாலை பணியாளர்கள் 41 மாத பணி நீக்க காலத்தினை பனிகாலமாக அறிவிக்க வேண்டும். கருவூலம் உள்ளிட்ட அரசு துறைகளில் மென்பொருள் திட்டங்களை தனியார் வசம் ஒப்படைப்பதை கைவிட வேண்டும். ஊராட்சி செயலாளருக்கு கருவூலம் மூலமாக ஊதியம் வழங்கிட வேண்டும் .அரசு ஊழியர்களின் மருத்துவ காப்பீடு திட்டத்தை அரசு ஏற்று நடத்த வேண்டும். போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் நெடுஞ்சாலைத்துறை ஊழியர்கள் வருவாய் துறை ஊழியர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *